Advertisement

மாநகராட்சி மாணவர்கள் தற்காப்பு கலையில் தங்கம்

சென்னை:சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள், தேசிய தற்காப்புக்கலை போட்டியில், தங்கம் வென்றுள்ளனர்.கோவா தலைநகர் பனாஜியில், ஆக., 25, 26ம் தேதிகளில், தேசிய தற்காப்புக்கலை போட்டி நடந்தது. அதில் பங்கேற்ற, வில்லிவாக்கம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின், 6ம் வகுப்பு மாணவர்கள், அனில்குமார், வினோத் பங்கேற்றனர்.


அவர்கள், 25 - 30 கிலோ எடைப்பிரிவில், முதலிடம் பிடித்து, தங்கம் வென்றுள்ளனர். இதன் வாயிலாக, 2019ல் நடைபெற உள்ள, ஆசிய அளவிலான, தற்காப்புக்கலை போட்டியிலும் பங்கேற்க, தகுதி பெற்றுஉள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து, மாநகராட்சி துணை கமிஷனர் லலிதா பாராட்டினார். அடுத்த போட்டியில் பங்கேற்க, மாநகராட்சி நிர்வாகம் அனைத்து உதவிகளையும் செய்யும் என, தெரிவித்துள்ளார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement