Advertisement

மல்லையா சந்திப்பை மறைத்தது ஏன்?: ராகுல் கேள்வி

புதுடில்லி : ''பொருளாதார குற்றவாளியான விஜய் மல்லையா, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வது குறித்து கூறியும், அதை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறைக்கு, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவிக்காதது ஏன்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.


வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, பல்வேறு வங்கிகள் வழக்கு தொடர்ந்தன.


விசாரணை :
அதைத் தொடர்ந்து, 2016 மார்ச்சில், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கியுள்ளார். அவரை, நாடு கடத்துவதற்காக, லண்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இது தொடர்பான விசாரணைக்காக, லண்டன் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வந்த

மல்லையா, 'நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன், வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவதில் சமரசம் செய்வது குறித்து, நிதி அமைச்சரை சந்தித்து பேசினேன்' என, கூறினார். ஆனால் இதை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலவருமான, அருண் ஜெட்லி மறுத்து உள்ளார்.


'என்னை சந்தித்து பேசியதாக மல்லையா கூறியது பொய். பார்லிமென்டில் இருந்தபோது, சமாதானம் செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், வங்கிகளிடம் பேசும்படி கூறிவிட்டேன்' என, ஜெட்லி கூறியிருந்தார்.


இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அருண் ஜெட்லி பொய் சொல்கிறார். பொருளாதார குற்றவாளியான மல்லையா, தான் லண்டனுக்கு செல்ல உள்ளதாக, மத்திய நிதி அமைச்சரிடம் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து, வழக்குகளை விசாரித்து வரும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, ஜெட்லி, ஏன் எந்தத் தகவலும் அளிக்கவில்லை?


மல்லையா லண்டன் தப்பிச் செல்வதற்கு வசதியாக, இந்தத் தகவலை அவர் மூடி மறைத்தாரா அல்லது அவருக்கு மேல் உள்ள யாராவது, இந்த உத்தரவை ஜெட்லிக்கு பிறப்பித்துள்ளனரா? இவ்வாறு அவர் கூறினார்.பேட்டி :
காங்கிரஸ், எம்.பி.,யான, பி.எல்.புனியா கூறியதாவது: பார்லிமென்ட் வளாகத்தில், ஜெட்லியும், மல்லையாவும் பேசியதை, நான் பார்த்தேன். இது குறித்து, அப்போதே, நான் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தேன். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால், மல்லையாவுடன் எதுவும் பேசவில்லை என ஜெட்லி கூறியுள்ளார்; அது, முழுக்க முழுக்க பொய். இவ்வாறு அவர் கூறினார்.

துாண்டிவிடுகிறாரா ராகுல்? இந்த சர்ச்சை குறித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல், கடந்த மாதம், பிரிட்டனுக்குச் சென்றார். அதன் பின், தற்போது, ஒரு பொய்யான குற்றச்சாட்டை ல்லையா கூறியுள்ளார். மல்லையா இவ்வாறு திடீரென பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு பின்னணியில், ராகுலின் பயணம் அமைந்ததா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து (30)

 • Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா

  நியாயமான கேள்வி, பதில் கூற நேர்மை இருக்கிறதா இந்த கேடியின் டீமுக்கு?

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  ஏன் இன்னும் பிஜேபி குவட்ரோச்சி தப்பிப்போனதை எப்படி என்னா என்று கேட்கவில்லை, தப்பு செய்தவர் வெளிநாடு சென்று தப்பிக்கலாம் என்று முதலில் நிரூபித்தது குவட்ரோச்சி தான், அதற்க்கு உடந்தையாக இருந்ததும் இதே காங்கிரஸ் கட்சியும் அந்த இத்தாலி அம்மாவும்தான்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  சீன தூதரை வரவழைத்து ரகசிய கூட்டம் போடுகிறாய் , லண்டன் சென்று மல்லையாவை சந்திக்கிறாய் இதையெல்லாம் ஏன் மறைகிறாய் உண்மையை சொல்லுங்க .

 • Suresh Ulaganathan - Bangalore,இந்தியா

  ராகுல் சொன்னதில் தப்பு இல்லை. மல்லையா தப்பி சென்று 1 வருடம் ஆகிவிட்டது. இதே சாமானியன் செய்தால் விட்டு விடுவார்களா ? கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டு கருப்பு பணத்தை வைத்தவர்கள் எல்லாம் தப்பித்து கொள்கிறார்கள்.

 • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

  பப்பு அளவுக்கு அதிகமாக பொய்யையும், புனைசுருட்டையும், அவிழ்த்து விட்டு ஆதாயம் தேட நினைக்கிறான், பொய்யை திருப்பி திருப்பி சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற நேரு கான் காலத்திய பிரச்சாரத்தை இந்த பப்பு கான் கையிலெடுத்திருக்கிறான், இதுவே கரையான்புற்று கான்கிராஸ்க்கு வினையாக போகிறது. பப்பு எந்த செயலும் செய்யாமல் சும்மா கத்திக்கொண்டிருந்தால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற கேவலமான வழியை கையாள ஆரம்பித்திருக்கிறது பப்பு பேபி, இதற்க்கு சரியான பாடமும், மூக்குடைப்பும், தண்டனையும் மக்கள் கொடுப்பார்கள். பப்புவின் இந்த கீழ்த்தரமான அரசியல் முயற்சியால் காங்கிரஸ் இல்லாத, ஊழலற்ற, தூய்மையான பரதம் விரைவில் கிடைக்கும் .. ஜெய் ஹிந்த்

  • Ravindran Nair - Ahmedabad,இந்தியா

   பப்புக்கு மட்டும் இல்லை சுடலைக்கும் இது பொருந்தும்.

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  மல்லையாவுக்கு லோன் கொடுத்தது, ராஜ்ய சபா எம்.பி ஆக்கி அழகு பார்த்தது எல்லாம் காங்கிரஸ்... 2009 ஆம் ஆண்டில் இருந்து கடனை வசூல் செய்யாமல் மேலும் மேலும் கடன் கொடுத்தது காங்கிரஸ்...இது பற்றி பப்பு பேசலாமே ??

 • Prakash Elumalai - Edison, NJ,யூ.எஸ்.ஏ

  யார் மறைத்தது ?? எந்த ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு பேசினாங்க ?? இருவரும் ராஜ்ய சபா உறுப்பினரகள் இருவரும் சந்தித்து பேசியது நாடாளும் மன்றத்தில்தான் .. உங்கள போல யாருக்கும் தெரியாம சீனா தூதரை சந்தித்து போல இல்லையே ..அதுவும் இரு நாட்டுக்கும் ப்ரிச்சனை உச்சத்தில் உள்ள போது ..

 • adalarasan - chennai,இந்தியா

  என்னமோ தனியா,ரக்சியமாக,சந்தித்ததுபோல், வேண்டுமென்றே, குழப்பி விடுகிறார் போலும்?இவர் மேல் கடனை ஏன் கொடுத்தீர்கள் என்று கேள்விக்கு, தப்பிக்க ராஜன் அறிக்கை], திசை திருப்பம் வேலை>ஓபனாக, பார்லிமென்டில், துரத்தி சென்று, தன்னிடம் பேச வந்ததையும், பாங்குடன், பேசுங்கள் என்றுகூறியதாகவும் ஜெட்லி அவர்கள், விளக்கம் சொன்ன பிறகும்? இது மற்ற உறுப்பினர்கள் முன்தான் நடந்திருக்கும், கேமிராவில் பதிவு ஆயிருக்கும் குட்டையை குழப்பி, காங்கிரஸ் தப்பிக்கபார்க்கிறது?மக்கள் புரிந்து கொள்வார்கள்? ,

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  எல்லாம் தக்காளி சட்னி..

 • Shanu - Mumbai ,இந்தியா

  Good question. The finance minister will not answer for this.

 • கணபதி -

  காங்கிரஸும் மல்லையாவும் கூட்டுக் களவாணிகள். இரண்டும் சேர்ந்து நாட்டைக் கெடுக்கப் பார்க்கிறார்கள்

 • P Karthikeyan - Chennai,இந்தியா

  ராகுல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதில் உள்ள பின்னணி என்ன என்று மோடி விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும். குறிப்பாக சீனா சென்றது சமீபத்தில் அமெரிக்கா சென்றது அனைத்தும் விசாரிக்கப்படவேண்டும்.

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  இந்தப்பெரிய மனுஷிப்பேற்றபிள்ளை ரொம்பவே நேர்மையாளனா?/தானா ஒரு வரியும் எழுதவோ பேசவோ தெரியாத சமர்த்து எவனொகிறுக்குவதையெல்லாம் பேசிட்டு மாட்டிண்டுமுளிக்குறாங்க யோவ் மல்லையா தப்பினதுக்கு உன் அம்மா சிங்கெல்லாம் தான் முக்கிய காரணம் , எதுவும் கிடைக்கலேன்னா ஏதாவது கற்பனை பண்ணிண்டு பினாத்துவதுதான் இவன் ஜோலி

 • rajan - kerala,இந்தியா

  பப்பு நீ, அந்த பொருளாதார கேடி குடும்பமும் நீரவ் மோடிய ஏன் சந்திச்சே? என்ன வைர வியாபாரமோ? இது ஒண்ணுக்கே உன் குடும்ப கட்சிய மொத்தமா கலைச்சுட வேண்டியது தான்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வீணா வெறும் வாயை மெல்லுவாங்க ..அவல் கிடைத்தால் மேலும் மெல்லுவாங்க என்ற பயத்தில்தான்

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  மோடி தற்போது ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால் எப்படியாவது பிஜேபி மேல் சேற்றை வாரி இறைத்து தப்பித்துக்கொள்ளலாம் என்று கண்ட பொய்களை திருடர்களுடன் சேர்ந்து அவிழ்த்து விடுவது காங்கிரசுக்கு புதிதல்ல . ஆனானப்பட்ட 2G யை ஜீரோ லாஸ் ன்னு, ஒரு முழு யானையவே சோற்றுக்குள் மறைக்கப்பாத்த கட்சி தானே.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உங்களுக்கு தான் மறைக்கிறாங்க ... விட்டுவிடுங்கள்

 • rajan - kerala,இந்தியா

  பப்பு நீ, அந்த பொருளாதார கேடி குடும்பமும் ஏன் சந்திச்சே? என்ன வைர வியாபாரமோ? இது ஒண்ணுக்கே உன் குடும்ப கட்சிய மொத்தமா கலைச்சுட வேண்டியது தான்.

 • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

  மல்லயாவை பப்பு லண்டனில் சந்தித்து சதித்திட்டம் போட்டிருப்பது வெட்ட வெளிச்சம் ஏனெனில் மல்லையாவை பாஜக அரசு இங்கு கொண்டுவந்தால் மல்லயாவுக்கு கடன்கொடுக்க கட்டாயப்படுத்தியது யார் என்பது வெளிவந்துவிடும் இருவரின் பாதுகாப்புக்காக ஒரு டீல்

 • GanesanMadurai -

  பப்பூஜி வக்பு வாரிய தலைவரை மல்லையாவின் மீதான "வக்பு நில அபகரிப்பு" புகாரை வாபஸ் வாங்க நிர்பந்தம் செய்தீர்களா? மல்லையாவின் சட்ட விரோத ஆலைக்கு வக்பு நிலத்தை அபகரித்து கொண்டு செயல் படுவதை எதிர்து மல்லையாவுக்கு எதிராக வக்பு வாரியம் மீரட் போலீசில் கொடுத்த புகாரை நீங்களும் உங்கள் சல்மான் குர்ஷித் இருவரும் சேர்ந்து ஏன் வக்பு வாரிய தலைவர் திரு ரிஸ்வான் அவர்களை மிரட்டி வாபஸ் வாங்க வைத்தீர்கள்? முஸ்லிம் மக்களுக்கு பதில் கூறுங்கள்.

 • GanesanMadurai -

  பப்பூஜி 2011ல் பிரதமர் மண்ணு மோகன் சிங்கை "தனிப்பட்ட தலையீட்டிற்காக" மல்லையா ஏன் எதற்கு நன்றி பாராட்டினார்?

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  Mr.Ravi Shankar Prasad is always give unaccep support and arguments in favour of BJP and Its men. Ignore him. The video recordings of Parliament lobby can be made public to substantiate the truth in the allegations against Mr. Arun Jaitlely is true or not - to clear the air.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  மல்லையாவை பத்திரமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த நாங்கள் எப்படி மல்லையாவை சந்தித்ததை சொல்ல முடியும்?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  இவன் ஏன் மல்லையாவை சமீபத்தில் சந்தித்தான்? ஏன் ஒரு கோடி மல்லய்யாவிடம் கடன் வாங்கின்னான்? அன்பை முறிக்கும் கடன் இங்கு நட்பை வளர்க்கவா?

 • sankar - trichy,இந்தியா

  ஜெட்லீ மல்லையாவை சந்திச்சாராம் யாரு சொன்ன மல்லையாவெய் சொல்லிட்டாரு . ( கவுண்டமணி : அவன் ரொம்ப நல்லவன்பா மற்றவர் : யாரு சொன்ன . கவுண்டமணி அவனே சொன்னன்பா )

  • Karthik - Chennai,இந்தியா

   இங்கு சொன்னது ஜெட்லீ தான் சொன்னாரு தான் சந்திக்கவேயில்லை. அப்படி பார்த்தால் உங்க காமெடி படி அது ஜெட்லீ தான் குறிக்கும். உங்கள் கருத்து சூப்பரோ சூப்பர்.

 • Aarkay - Pondy,இந்தியா

  மல்லையாவும், மங்குனியும் சொல்வதெல்லாம் உண்மை என்று நம்புவது முட்டாள்தனம் மல்லையாவை சந்திக்காத காங்கிரஸ்காரன் எவனாவது உண்டா? மல்லையா உச்சத்தில் இருந்தபோது, அவனருகில் நின்று போட்டோ எடுத்துக்கொள்வதை பெருமையாய் நினைத்த அரசியல்வாதிகளையும், நடிகர்களையும், விளையாட்டு வீரகர்களையும் என்னவென்று சொல்ல? கொடுத்த கடனெல்லாம், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்.... இன்று வசதியாய் தங்களுக்கு சம்பந்தமே இல்லாதது போல கலந்துகொள்ள பார்க்கிறார்கள் கயவர்கள் வெள்ளையர்களைவிட மோசமானவர்கள் இந்த மாபியா கும்பல்காரர்கள்

  • Karthik - Chennai,இந்தியா

   கொடுத்த கடனையெல்லாம் விடுங்க. பிசினஸ் என்றால் கடன் வாங்க தான் செய்ய வேண்டும். இங்கு பிரச்சனையே மல்லையா மாட்டி கொண்டவுடன் தப்பிப்பதற்கு உதவி நாடியுள்ளான். அதற்கு பேரம் பேசப்பட்டது பிரச்சனை. இங்கு பிரச்சனையே பேரம் தான் அதை விட்டு யாரு கொடுத்தா யாரு வாங்கினா என்று தான்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  காங்கிரஸ் ஆட்சியில் மல்லையா கடன் வாங்கினார். பிஜேபி ஆட்சியில் பத்திரமாக லண்டன் தப்பி சென்றார். இரு கட்சிகளும் கூட்டு களவாணிகள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement