Advertisement

ஒரு கோடி பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு

புதுடில்லி : நாடு முழுவதும், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 14 இடங்களில், தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த, 'மெகா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.


மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு அமைந்தபோது, 'அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், 'போதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை' என, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.


லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், பிரமாண்ட திட்டத்தை, மத்திய அரசு தயாரித்து வருகிறது. அதன்படி, மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 14 இடங்களில், தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. கடலோர மாநிலங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


இது குறித்து, மத்திய அரசு உயர் அதிகாரிகள் கூறியதாவது: அதிக அளவில்
வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், வேலைவாய்ப்பு மண்டலங்களை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும், 'நிடி ஆயோக்' அமைப்பின் ஆலோசனையின்படி, மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் மூலம், விரிவான திட்டம் தயாராகி வருகிறது.


இந்த திட்டத்தின்படி, நாட்டின், 14 இடங்களில், இந்த மண்டலங்கள் அமைக்கப்படும். தலா, 2,000 ஏக்கர் நிலத்தில், கடலோர மாநிலங்களில் இந்த மண்டலங்கள் அமையும். அடுத்த மூன்று ஆண்டுகளில், ஒரு கோடி பேருக்கு, இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.


ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வேலைவாய்ப்பு மண்டலத்திலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தொழிற்சாலைகளை இங்கு அமைக்கலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்தும். மாநில அரசுகள், இந்த திட்டத்துக்காக, குறைந்தபட்சம், 2,000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்.


இந்த மண்டலத்தில், 35 வகையான தொழில்கள் இயங்க முடியும். உணவு, சிமென்ட், பர்னிச்சர், மின்னணு பொருட்கள் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள், இங்கு தங்கள் ஆலைகளை அமைக்கலாம். ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோரும், இங்கு செயல்படலாம்.


தற்போது விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இறுதி வடிவம் பெற்றதும், முறையான ஒப்புதல்கள் பெறப்பட்டு, அமைச்சரவைக்

கூட்டத்தில் விவாதிக்கப்படும். அடுத்த ஆண்டு துவக்கத்தில், இந்த திட்டம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


திட்டத்தின் முக்கிய அம்சங்கள் :




* ரூ.1 லட்சம் கோடி மதிப்பில், வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைய உள்ளன

* கடலோர மாநிலங்களில், 14 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன

* அடுத்த மூன்று ஆண்டுகளில், நாடு முழுவதும், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

* இந்த திட்டத்தின் கீழ் நிறுவனங்களை, ஆலைகளை அமைப்போருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்

* வரி, விடுமுறை காலம், மூலதன மானியம், ஒற்றைச் சாளர முறை ஒப்புதல் போன்ற சலுகைகள் கிடைக்கும்

* வேலைவாய்ப்புகளை அதிகளவில் அளிப்பதற்கு ஏற்ப, அதிக சலுகைகள் அளிக்கப்படும்.

Advertisement
 

வாசகர் கருத்து (57)

  • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

    யாராவது ஒருத்தருக்கு “ஒரு கோடி..”ன்னு பேர் வச்சுட்டு அவருக்கு வேலை கொடுத்துட்டாப் போச்சு....

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    //ஒவ்வொரு வேலைவாய்ப்பு மண்டலத்திலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் தொழிற்சாலைகளை இங்கு அமைக்கலாம்// இப்போது இருக்கும் "ஸ்பெஷல் எகானமி ஸோன்கள்" மேலே சொன்னதற்காகத்தான் உருவாக்கப்பட்டவை. காங்கிரஸ் ஆட்சி யில் அமலாக்கத்திற்கு வந்தவை. இந்த SEZ Special Economy Zone களின் பேரை "வேலைவாய்ப்பு மண்டலம் என்று பேரை மாற்றி ஊரை ஏமாற்றுகிறார்கள் பீஜேபீ யின் தலை முதல் தொண்டர்கள் வரை. மக்கள் அவ்வளவு விவரம் இல்லாதவர்களா?????

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    அண்டப்புளுகுகளின் உச்சம் வெ. சென்னை எழுதிய இதுதான். இப்போது வேலைவாய்ப்பு இணையதளங்கள் ஏராளம். வேலைவாய்ப்பு மையங்கள் என்பதெல்லாம் பக்கா ஏமாற்று வேலை. நடக்கவே வாய்ப்பே இல்லாதவற்றை பேசுவதே இவருக்கு வழக்கமா போச்சு.. யோசிக்காமல் ஜால்ரா அடிக்க பெரிய கும்பல் இருப்பது வேற இவருக்கு வசதி.

    • Manian - Chennai,இந்தியா

      உன் போன்றவர்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள். அரசியல் வியாதிகள், அரசாங்க வியாதிகள் தொழில் ஆரம்பிக்கும் முன்பே 35 - 40 % கஃட்டிங் கேக்கிறார்கள். உங்க்ளுக்கு லாபம் எப்படியுகம் வரும். அப்போது நாங்க இருப்போமா இல்லையானு தெறியாது. அதனால் இதை அட்வான்ச்சாக தாருங்கள். உங்கள் வாக்கில் மூலம் தந்தாள் போதும் என்கிறார்கள். இதை நான் நேரில் கேட்ட்டேன். அனால், இதை லஞ்ச போலீசிடம் சொன்னால் நான் கொள்ள பாடுவேன் என்பதும் தெறியும். ஆகவே, சுமா கூவாதே . கிராமங்களை சென்று மக்கள் ஓடடை விற்பதை தடுக்க ஏதாவது நல்ல காரியம் செய். நீ அந்தப் புழுகனாக இருப்பதால், எல்லோரையும் உன்னை போல நினைக்காதே தம்பி. அதோட, னையும் இட-ஜாதி- மத ஒதுக்கீட்டில் படிச்ச புயலாக இருந்ததால்தான் இப்படி நினைப்பதை.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    மற்ற எல்லா மாநிலங்களிலும் இது நடக்கும், ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் நடக்காது. காரணம் நிலம் கையகப்படுத்தி கொடுக்க வேண்டியது மாநில அரசு. ஓன்று அரசு நிலங்களை கையகப்படுத்தாது, இரண்டாவது இருக்கவே இருக்கிறார்களே, நம்ம வைகோ, திருமா, மே பதினேழு போன்ற கூட்டங்கள் இந்த திட்டத்தை செயல்பட விட மாட்டார்கள். மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து அவனவன் வேலைக்கு பார்க்க போய் விட்டால், இவர்களுக்கு பின்னால் பிரியாணிக்கும் குவாட்டருக்கும் எப்படி கூட்டம் வரும.ஆதலால் இந்த திட்டத்தை இங்கு செயல்படுத்த விட மாட்டார்கள்.

  • ஆப்பு -

    அச்சே தின் ஆத்தே ஹைன்..எல்லோருக்கும் 15 லட்சம் ஹைன்... ஏக் கரோர் நௌக்ரீ ஹைன்.. எல்லோருக்கும் வீடு ஹைன்...எல்லோரும் குஷி ஹைன்... பெட்ரோல் விலை குறயும் ஹைன்..விலைவாசி இல்லை ஹைன்...

    • Manian - Chennai

      மை பாகல் ஹும் .கீ ளப்பாக்கம் சே ஆஃபி ஆபி பாஹர் ஆயா ஹும்.

  • jagan - Chennai,இந்தியா

    இதிலும் இட ஒதுக்கீடு (ஜாதி மற்றும் வைத்து , பொருளாதாரம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்) கொண்டு வந்து திறமையற்றவர்களே வேலை குடுக்க வேண்டும் - இப்படிக்கு டாஸ்மாக் வாழைமட்டை தமிழர்கள்

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    50 வயதுக்கு மேல் உள்ள ஊழல் அதிகாரிகளை ஓய்வு கொடுத்து அனுப்பி விட்டு அவர்களுக்கு பதில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் .

    • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

      அம்பது வயசுக்குள்ள ஊழல் செஞ்சா பரவா இல்லையா...???

  • ramanathan - Ramanathapuram,இந்தியா

    இரண்டாயிரம் ஏக்கர் நிலமா ....?எங்களின் வளத்தை அழித்துவிட்டுத்தான் வேலைகிடைக்கும் என்றால் அந்த வேலை தேவையில்லை என்று கூவும் கூவர்கள் கூவலாம்.

  • Suresh Ulaganathan - Bangalore,இந்தியா

    . 4 வருடம் என்ன செய்தார்கள் ? அடுத்த தேர்தலில் ஜெயிக்க இது ஒரு விளம்பரம்.

    • ramar - ,

      100%

    • Manian - Chennai,இந்தியா

      முதலீடு செய்த மாற்றிய நாடினார்கள், வெளியில் அதிக வாடி வருகிறதென்று போடட முலீடுகளை எடுத்துச் சென்றுவிடார்கள். இங்கே லஞ்சவியாதிகள் கொள்ளை அடித்ததை எந்த தொழிலிலும் முதலீடு செய்யவில்லை. அவர்கள் கந்து வட்டி கந்த சாமிகளாக மாறிவிடார்கள். மேலும் கௌரனா முதலில் வாங்கிய 3 % லஞ்சம் தற்போது விலை வாசி உய்ரர்வால் 45 % தாமாக உயர்ந்து விட்டது. ஏமாந்தவர்கள் யாரும் முதலீடு செய்ய முன் வரவில்லை. வைகோ, தொளபதி, திருமா, மான்கொடடை முனிவர் போன்றவர்களுக்கு லஞ்சம் பகிர்விழி உள்சண்டை இருக்கிறது. இதெல்லாம் நாலு வருஷத்திலே எவனாலும் திறக்க முடியாத தடுப்பணைகள்.

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    கடற்கரை மாவட்டங்களில் செயல்படுத்த நினைப்பது தவறு , அங்கே ஏற்கெனவே பாதிரிகள் கொத்தடிமைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் , இந்த திட்டம் செயல்படுத்த விடாமல் உங்கள் மேல் ஏவி விடுவார்கள். ஆகவே வேறு மாவட்டங்களுக்கு மாற்றுங்கள்.

    • Manian - Chennai,இந்தியா

      போக்கு வரத்து தர்ம சங்கடத்தை ஏப்பை எங்கே தீர்க்க முடியும்? யார் நிலம் தருவார்கள்?

  • ஆப்பு -

    ஓஹோ...வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பா? அப்பிடி என்ன வெட்டி முறிக்கிற வேலை இருக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்களில்?

  • mohan - chennai,இந்தியா

    எல்லாம் சரி, அனால், மக்களின், கல்வி, சுய அறிவு, ஆகியவற்றை மேம்படுத்தாமல், இந்தியாவை மேம்படுத்த முடியாது.. பல இலவச திட்டங்களால் நாட்டின் தொழில் துறை தள்ளாடி கொண்டு உள்ளது... வரி விகிதங்கள், விற்பனையாவதற்கு பொறுத்த மாக இல்லை. இப்பொழுதுள்ள நாட்டின் நிலை, கார் கம்பனிகள், இரு சக்கர வாகன கம்பெனிகள், பெட்ரோல் கம்பெனிகள், இவை சார்ந்தவை நல்ல லாபகரமாக இயங்கும்... மற்ற தொழில்கள் சிரமம். முதலில் வரி விகிதங்கள், இலவசங்கள் ஆகியவற்றை முறை படுத்தி அணைத்து மக்கள், வரவு செலவுக்கு திண்டாடாமல் இருந்தால், நாட்டின் தொழில் வளர்ச்சி தானாக முன்னேறும். இருக்கும் தொழில்கள் சிரமத்தில் இருக்கும் போது, புதிய தொழில்கள் எவ்வாறு சிறப்பாக செல்லும். ஏற்கனவே உள்ள நூல் மில் பாதியாக குறைந்து விட்டன... cnc யூனிட்கள் பாதி மூடியாகி விட்டது.... இப்படியே சென்றால் என்ன முடிவு... முறையற்ற இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்க பட்டு, அதனால் விவசாயம் முதல் கொண்டு எல்லாமும் பாதிக்க படுகிறது...முறைப்படுத்துங்கள் இலவசத்தை....

    • Manian - Chennai,இந்தியா

      அடிப்படை கல்வியில் தலித்துக்கள், கிராம பைலட்டுகளை ஏமாத்துறானுக. லஞ்சம் கொடுத்து தன ஜாதிக்காரனையே (3 ஜாதிகள்) ஆசிரியர்களாக நியமிக்கும் பொது, கல்வி, சுய அறிவே எப்படி வலம். லஞ்சம், ஓடடை விற்பதே இன்றய திருடர்கள் கழக நாகரீகம். அதை மாறா ஆக்க வழியில் எனா செய்ய முடியும் என்பதையும் சொல்லுங்களேன் ?

  • sahayadhas - chennai,இந்தியா

    Vns , தமிழ் நாட்டுக்கு பிழைக்க வந்த நாடோடி எது முன்னேற்றம் 1 Us dollar 73 ரு யா

  • Ray - Chennai,இந்தியா

    போட்டியின்றி தேர்வாகவும் போட்டியொன்று தேவையாச்சே போட்டியின்றி வெற்றியெங்கே போட்டியிட நீவேண்டும் வெல்வதற்கே நானிருக்கேன் வேண்டும்நீ தோற்பதற்கு நீயின்றி நானில்லை நீவேண்டும் நான்வாழ

    • lazyhoneybee - Chennai,இந்தியா

      ஐயா, தங்கள் கருத்து மிகவும் அருமை. ஆனால் திரு. கமலஹாசன் அவர்கள் பாணியில் எழுதியதினால் பல முறைகள் படித்தபின்னே அறிந்து கொள்ள முடிந்தது.

    • Manian - Chennai,இந்தியா

      அதுதான் இன்றய தமிழி நாட்டின் தலை எழுத்து. இப்படித்தானே கருணா எல்லோரையும் ஏமாற்றினார்? பணமெல்லாம் இங்கேயே, அடியா இருப்பது உனக்கே, ஓடடெல்லாம் எனக்கே, ஒடடானடியாக இதே உனக்கே, லஞ்சப்பதவி எல்லாம் எனக்கே, கெஞ்சி வேலை கேட்பதே உனக்கே, ஜாதி பெயரால் மேலே போவது எங்கே, ஜாதியை திட்டி சொல்வது உனக்கே.- அடிபட புலவர் அன்புநாதர்.

  • vns - Delhi,இந்தியா

    ராம் ராம்.. மத வெறியர்களும் த்ராவிஷங்களூம் தோல்வி பயத்தில் ஊளையிடுகின்றன. பிரதமரின் திட்டம் உங்களைப் போன்ற இந்தியா முன்னேறக்கூடாது என்று நினைக்கும் இந்திய விரோதிகளுக்கல்ல. இந்தியா மோடியின் ஆட்சியில் முன்னேற்றமே கண்டுள்ளது. இன்னமும் முன்னேறும். வாழ்க மோடி வாழ்க பாரதம்.

  • sahayadhas - chennai,இந்தியா

    நன்றாக புரிந்து கொள்ளுங்கள் 1 கோடி பேருக்கு வேலை தர செல்லவில்லை , தொழில் தொடங்க மண்டலங்கள் அமைப்பு தருகிறார் உங்க கிட்ட இருக்க பணத்தை அதுல கொண்டு கொட்டிட்டு தலைல துண்ட போட்டுட்டு போங்கனு

    • sankar - trichy,இந்தியா

      தொழில் தொடங்கறவன் அவனே வேலை செய்வானா இல்ல வேலைக்கு ஆள் வைப்பார்களா . மகேந்திர பார்க்கில் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் இருப்பது போல் . மற்ற தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்க போகிறார் மோடி . கொஞ்சம் அறிவை வளர்த்துக்குங்க

    • Manian - Chennai,இந்தியா

      சதய தாஸுக்கு எப்போதுமே பின் அறிவுதான்.

    • Vetri Vel - chennai,இந்தியா

      ஜால்ராவுக்கே ஜால்ரா... கிழிஞ்சு ரொம்ப நாளு ஆவுது... குஜராத்தி கும்பலின் தம்பட்டம்...

  • venkat - chennai,இந்தியா

    பிரதமர் செயல் வீரர் மோடி அவர்களின் கீழ்கண்ட “ஏழைகள் எல்லோருக்கும் எல்லாம்” மற்றும் குறை கூறுவோரையும் உள்ளடக்கிய மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை தெரிந்து புரிந்து வரவேற்பது நம் எல்லோருக்கும் நல்லதே. பிரதமர் மோடியின் சில கனவு நனவாக்கும் திட்டங்கள் >> இந்தியாவில் எல்லா குடும்பங்களுக்கும், முக்கியமாக எல்லா ஏழைகளுக்கும் இலவச மானிய குறைந்த வட்டி வீடுகள், இலவச மானிய கழிப்பிடம், எல்லா ஏழை குடும்பங்களுக்கும் சௌபாக்கிய திட்டத்தில் மின்னிணைப்பு, ஏழைப்பெண்டிருக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு, 30 கோடி பேருக்கு மேல் எளியோருக்கு சன தன் கணக்கு மூலம் இலவச உயிர் (ரூ 30000 ) விபத்து (ரூ 200000 ) கடன் (ரூ 10000 ) பாதுகாப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு ( ஏறத்தாழ 50 கோடி இந்திய மக்களுக்கு) வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, முத்ரா திட்டத்தில் 12 கோடி இளைஞர் மகளிருக்கு மானிய தொழில் கடனுதவி, வளர்ச்சித் திட்டங்களில் எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி, 2 .5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி, நதி நீர் இணைப்பு, நதி நீர் போக்கு வரத்து, (வாரணாசியில் தற்போது கப்பல் வந்து செல்கிறது), நீர் விமானப் போக்குவரத்து, கடலோர சுற்றுலா பொருள் கப்பல் போக்குவரத்து, பல லட்சம் கோடி நழ்டத்தில் இருந்த மாநில மின் வாரியங்களை மீட்டு லாபத்தில் கொணர்ந்தது, மின் திருட்டை கட்டுப் படுத்த ஸ்மார்ட் மீட்டர், மின் சேமிப்புக்கு குறைந்த விலைக்கு LED விளக்கு, குறைந்த கொள்முதல் விலையில் தனியாரிடம் இருந்து அளவற்ற சூரிய காற்றாலை மின் உற்பத்தி கொள்முதல், நீண்ட கால இறக்குமதி பிரச்சினையான உயர் விலை பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக உள்நாட்டு CNG , மெத்தனால், மின்னூர்தி ஊக்குவிப்பு, உள்ளூரில் ஹைட்ரொ கார்பன் உற்பத்தி, உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எல்லா கருப்பு பணத்தையும் வங்கி வரவாக்கி, அவர்களையும் வரி சேர்த்து வரிகட்டுவோர் எண்ணிக்கையை 70 சதவிகிதம் உயர்த்தியது, காங்கிரஸ் GST ஐ ஒரு வருடத்திற்குள் செயல்முறை சீர் செய்து, பல வரிகளை ஒன்றாக்கி பல பொருட்களுக்கு வரி குறைத்து வியாபாரம் செய்வதை கணினி மயமாக்கியது (35 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28 சதவிகிதம் வரி) , தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், வேளூர், நெய்வேலி, ஓசூர் உட்பட இந்தியாவில் பல குறு நகரங்களுக்கு குறைந்த கட்டண உதான் திட்ட விமான வசதி, சென்னை உட்பட எல்லா பெருநகரங்களுக்குள்ளும் விரைந்து செல்ல தூய்மையான உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில், பெருநகரங்களை இணைக்க புல்லேட் ரயில் திட்டம், 140 கி மீ வேகத்தில் நகரங்களுக்கு இடையே சென்று வர செப்டம்பர் 2018 ல் வெளிவரும் சென்னை ICF உருவாக்க Train 18 மின் தொடர் வண்டி, டெல்லி மும்பை, டெல்லி கொல்கத்தா தனி விரைவு சரக்கு தனி ரயில் பாதை, (பின்னர் கொல்கத்தா, விசாகபட்டணம், சென்னைக்கு விரிவு), மாம்பழம் , விவசாய தொழில் விளை, உற்பத்திப்பொருள் போக்குவரத்து, ஏற்றுமதி பெருக்கத்திற்கு எல்லா மாவட்ட தலைநகரங்களையும், கடலோர நகரங்களையும், துறைமுகங்களை இணைக்க பாரத் மாலா, சாகர் மாலா (சிக்னல் இல்லா) விரைவு வழிப் பாதைகள், இறக்குமதியை நம்பி இருந்த காங்கிரஸ் கொள்கையை மாற்றி உள்நாட்டில் தனியார், பொதுத்துறை பாங்கோடு ராணுவ தளவாட உற்பத்தி, பத்து பங்கு குறைந்த நீர் உபயோத்தில், 10 பங்கு அதிக உற்பத்தி தரும் இஸ்ரேல் தொழில் நுட்பம் எல்லா மாநிலங்களிலும் அறிமுகம், ஆதார் மூலம் ரூ 80000 கோடிக்கு மேல் மானிய விரயம் மக்கள் வரிப் பண மிச்சம், இன்னும் பல பல திட்டங்கள். மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி மூலம் தினம் ரூ 5 க்கு 1 GB மேல் இணைய வசதியும் இலவச தொலை பேசி வசதியும் இன்று எல்லா மக்களுக்கும் இந்தியாவில் கிடைக்கிறது . வேலையற்றோர் வீட்டில் இருந்தே அரசு இணையத்தில் தகவல் பதிவு ( data entry) செய்து சம்பாதிக்கலாம். பி ஜெ பி தொலை நோக்கு பார்வை தீர்வில் உள்ளது. குழப்பத்தில், குழப்புவதில் இல்லை. தற்போது நமது மீனவர் ஸ்ரீலங்கா கடற் படையால் சிறை செய்தி, பாக்கிஸ்தான் எல்லைக்கோடு குண்டுபோடும் செய்தி தினம் வருவதில்லை. கர்நாடக காவேரி பிரச்சினை காவேரி ஆணையத்திற்கு சென்று விட்டது. நீண்டகாலத் தீர்வாக, பி ஜெ பி nda அமைச்சர் கட்கரி ரூ 100000 கோடி செலவில், 90 சதவிகிதம் மத்திய அரசு பங்களிப்புடன் கோதாவரி கிருஷ்ணா பெண்ணாறு காவேரி நதிகள் இணைப்புக்கு ஆந்திராவின் சம்மதம் பெற்று, தெலுங்கானா சம்மதத்திற்கு காத்திருக்கிறார். டெல்லி சென்ற நமது விவசாயத் தலைவர்கள், அரசியல் தலைகள், ஹைதெராபாத் சென்று விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100TMC வருடத்திற்கு நமக்கு கிடைக்கும். நீர் பிரச்சினை நிரந்திரமாகத் தீரும். இதுபோல திறன் வீரர் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்ட செயல் விவரம் அளவற்று பட்டியல் உள்ளது <<< மேற்படி செயல் வீரர் ஏழைப் பங்காளர் பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்ட விவரங்கள் உண்மையற்றவை என்று எந்த எதிர் கட்சிகளும் கூட சொன்னதில்லை.

  • Praveen - Chennai,இந்தியா

    ... Ellorukkum velai kidaikka poguthu.... ( Pagal kanavu)

  • Abraham David - Tuticorin ,இந்தியா

    நாடு முழுவதும் பகோடா தொழில் சாலைகள் அமைத்து 10 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன். இது என்னை தெரிந்தெடுத்தால் நான் செய்யும் முதல் பணி

    • Shanu - Mumbai ,இந்தியா

      பிஜேபி கட்சிக்காரர்கள் சொல்வார்கள் பக்கோடா செய்வதும் ஒரு தொழில் தானே. அந்த தொழில் செய்து வந்தவர் தானே எங்கள் தலைவர் மோடி. இப்போ பக்கோடா சுட்டால், இன்னும் 10 வருடம் கழித்து பிரதமர் பதவிக்கு நேரடியாக தேர்ந்தெடுக்க பாடுபடுவேன்.

    • Manian - Chennai,இந்தியா

      ஆபிரஹாம், பாவாடைகள் மூளை சலைவையால், மதத்தையும் பொருளாதாரத்தையும் ஒரே காணோடத்தில் பார்க்காதே. மதம் சுண்ணாம்பு , பொருளாதாரம் வெண்ணை. மதக் கவலை என்று ஊளையிட்டு ஆப்பிரிக்காவில் போயி இருப்ப.

  • Sulikki - Pudukkottai,இந்தியா

    எலக்சன் வந்துருச்சுரோய். மறுபடியும் பிஜேபி புளுகுணிகள் புளுக ஆரம்பிச்சிட்டாங்கடோய். 5 வருசமா செய்யாததை இனிமே செய்யப் போறாங்களாம்டோய். நாங்க நம்புவதற்கு நாரப்பயலுக இல்லைடோய். பிஜேபிக்கு சங்குதான். வாங்க வச்சிருக்கோம் ஆப்பு.

    • Manian - Chennai,இந்தியா

      உன் ஓட்டுக்கு என்றுமே மதிப்பு கிடையாது. வெறுமனே கூ வாதே.

  • Karun Muruga - banglore,இந்தியா

    டேய்....டேய் வாயால வாடா சுடலாம்....... எவ்வளவு நாள் இப்படி ஓடும் .........

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      டேய் டேய் ... எதால வேண்டுமானாலும் சுடுடா....வேலை செய்யுடா ...... சோம்பேறி.....

    • Sulikki - Pudukkottai,இந்தியா

      இருந்த வேலையையும் புடுங்கிகிட்டு விட்டுடீங்களேடா புளுகுணிகளா. உங்களுக்கெல்லாம் வெட்கம் என்பதே இல்லையா?

    • Manian - Chennai,இந்தியா

      தகுதி இல்லாத உன்னை போன்றவர்களை பெற்றார்கள், வளர்த்தர்களே அவர்களை கேட்க வேண்டிய கேள்வியை எங்கே கேக்கலாமா?

  • Shanu - Mumbai ,இந்தியா

    BJP government always plan. But finally it say, this plan/ project could be possible only in the year 2021. Modi always tell something great but never take any action. Wait and see.

  • Rajasekar - Trivandrum,இந்தியா

    ஐந்து வருடம் முடியும் போதுதான் மக்களுக்கு என்ன வாக்குறுதி கொடுத்தோம்ன்னு ஞாபகம் வரும் இப்போ திட்டம் போட்டு செயல்படுத்தப்போறது யாரு? கேக்குறவன் கேனைன்னா கேப்பையில நெய்வரும்ன்னு சொல்லத்தான் செய்வாங்க… அப்புறம் அம்பானி அதானி குழுமத்திற்கு சேவை செய்ய போய்டுவாங்க… கேடுகெட்ட அரசாங்கம் புத்திகெட்ட மக்கள். நாங்கள் காசு வாங்காமல் ஓட்டு போடுறோம் அதேபோல லஞ்சம் கையூட்டு இல்லாமல் அரசு தனது கடமையை செய்யுமா கேளுங்க ஒரு அரசியல் கட்சியும் அரசியல் வாதியும் நேரடியா பதில் சொல்லமாட்டாங்க அது அப்படி இது இப்படின்னு சொல்லி திசைதிருப்புவாங்க…..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஒன்னும் கொடுக்கப்போறதில்லை... வாயால்தான் சொல்லி வைப்போமே... பின்னல் யார் கேட்கப்போறாங்க...

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    தேர்தல் வருகிறது... காகிதத்தில் பத்து கோடி பேருக்கு கூட வேலை வாய்ப்பு என்று சொல்லுவார்கள்..வாய் சொல்லில் வீரர்கள்..

  • ஆப்பு -

    வேலை வாய்ப்பு நிலையங்கள் கடந்த 50 வருஷங்களா செயல்பட்டு வருது. பதிவு செய்தவர்களில் 99% வேலை கிடைக்காமலேயே ரிடையர் ஆயிடறாங்க. தேவை வேலகள், வேலை வாய்ப்பு மையங்கள் அல்ல.

  • ஆப்பு -

    கடந்த மூணரை வருஷமா என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க?

  • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

    எல்லாமே கணக்கு காட்டுற வேலை தானே. பலகோடிப் பேரின் வயிற்றில் அடித்து ஒரு கோடி அடிமைகளை உருவாக்கினால் உயரத்திலேயே இருந்து விடலாம் என்று கணக்கு போடுகிறார்கள். அநீதியின் கைகள் உயர்ந்து நிற்பது நிரந்தரமானதல்ல.

  • Karthik - Chennai,இந்தியா

    நம்ம மஸ்தானுக்கு வாயால் ஜிலேபி சுடுவது கை வந்த கலை இப்படி சொல்லி தான் கடந்த நான்கு வருடங்களா ஒட்டி கிட்டு இருக்காரு. வருடத்திற்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு எங்கே போனது. இது வரை ஒரு 10 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது என்று பக்தஸ் சொன்னதாக நினைவு. ஒரு மண்ணும் வேணாம். நீக்க கெளப்புங்க. உங்கள் அரசியில் எவருக்குமே நிர்வாக திறமை இல்லை என்று புரிந்து போனது. எங்களுக்கு சிங்கள் ஸ்டார் போடும் அணைத்து உள்ளம்களுக்கும் நன்றி இப்போதே சொல்லி விடுகிறேன்.

    • Manian - Chennai,இந்தியா

      95 % எந்த தகுதியிம் இல்லாதவர்கள், கட்சிகளில் தொண்டர்களாக வேலை பார்க்க வில்லையாயா?

  • Ivan -

    Olachi sambarika nenakiravan evanum Tamilan nu solli neratha veenaka maatan bjp a Kora solla maatan.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    வெறும் வேலை வாய்ப்பு மண்டலங்கள் மட்டும் போதாது - வேலை செய்ய நிறுவனங்களும் மக்களும் தயாராக இருக்கவேண்டும்... வேறு இடம் எப்படி போகமுடியும் என்று குறை சொல்லி ஒரு பயனும் இல்லை.. இது போன்ற மண்டலங்களுக்கு அருகில் ஒருங்கிணைத்த சேவைகள் இருக்கும் வகையில் நகரங்களை உருவாக்க வேண்டும்...உதாரணத்துக்கு ஒப்புநோக்கினால் கிழக்குக்கடற்கரை சாலை கூட தனியாரின் பங்களிப்பில் வளர்ந்ததுதான்... அரசின் பங்கு மிக மிக குறைவு... அரசு முன்னின்று அடிப்படை கட்டமைப்புக்களை உருவாக்கவேண்டும்...

    • Karthik - Chennai,இந்தியா

      அப்படி வருமா என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி? மஸ்தானுக்கே அந்த டவுட்.

    • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

      கார்த்திக் , உனக்கு எல்லாமே டவுட்டுதான். நல்லவர் சொல்லும் எல்லா திட்டங்களும் உனக்கு டவுட்டுதான்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    விரைவில் தேர்தல் வருகிறது. காதில் பூவும், வாயில் அல்வாவும் வைக்கப்படும்.

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

    இனி அதற்கு நிலம் கையக படுத்த வேண்டும் .என்ன ஆனாலும் தமிழகமோ கேரளாவோ இந்த திட்டத்தில் இருக்கும் .பார்க்கலாம் ?

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    உண்மை என்னென்னா ஒரு கோடி பேருக்கு பக்கடா போடும் வேல கிடைக்க போகுது. உலகத்துலயே பக்கோடா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடா இந்தியா மாறப்போகுது. மோடி அடுத்த முற கோட்சூட் போடும்போது அதுல பக்கோடாகாதர் ன்னு அவர் பேர கோட் சூட் பூரா எழுதி போட்டுக்கணும்

    • Chennaiite - Chennai,இந்தியா

      செம

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    பதினைந்து லட்சத்தை வங்கியில் இருந்து எடுத்து செலவழித்து விட்டீர்களா? இப்போது கப்பல் போக்குவரத்து துறையில் அரசு வேலை. எல்லோருக்கும் ஒரு லட்சம் ரூபாய் மாத வருமானம். ஜமாயுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement