Advertisement

சொத்து வைத்திருப்போரில் பிரான்சை முந்தும் இந்தியா

புதுடில்லி 'வரும், 2022ல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் நாடுகளை விட, இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் அதிகமாக இருப்பர்' என, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.'நைட் பிராங்க்' என்ற நிறுவனம், உலகளவில் பணக்காரர்கள் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2017ல், இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 200 ஆக இருந்தது;

இது, 2022ம் ஆண்டில், 340 ஆக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 2017ல், பிரான்சில், 230, ரஷ்யா, பிரிட்டனில், தலா, 220 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு கூடுதலான சொத்து மதிப்புள்ள பணக்காரர்களாக திகழ்ந்தனர்.இந்த எண்ணிக்கை, 2022ல், பிரான்சில், 310, ரஷ்யாவில், 270, பிரிட்டனில், 260 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வலிமையான பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு உயர்வு ஆகியவை, உலக பணக்காரர்களின் எண்ணிக்கை உயர காரணமாக உள்ளன.இவற்றால், 2022ல், உலகம் முழுவதும், 9,570 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து உடையோராக இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த, 2017ல், 3,600 கோடி சொத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 6,900 ஆக இருந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • krishnan - Chennai,இந்தியா

    ஏழைகள் இருக்கும் நாடுகளில் நம் முதல் இடத்தில இருப்போம்

  • சீனி - Bangalore,இந்தியா

    பிரான்சில், பெரும் பணக்காரர்களுக்கு அளவுக்கு மீறி உள்ள சொத்துக்களுக்கு பெரும் வரியும் உண்டு. எனவே அவர்களும் வேறு நாட்டுக்கு சென்று முதலிடு செய்கின்றனர். ரஷியா கம்ன்யூனிஸ்டு நாடு, அளவுக்கு மீறினால், ஆட்சியாளர்க்கு ஆதரவாக இல்லை எனில் ஜெயில் உறுதி. நம்ம ஊரில் சொத்து ஜாஸ்தி ஆன பிறகு பாதுகாக்க ஜெட்லி, ஜெத்மாலனி, அமித்ஷா, அனில் அம்பானி, மல்லையா, மாறன் போன்றவர்கள் எம்.பி ஆகி இலவச விமானத்தில் பறந்து பறந்து முதலிடு செய்கின்றனர்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    ஒரு காலத்தில் உலகத்திலேயே முதலாவதாக இருக்கும்... அதுவும் எல்லா சொத்துக்களும் அரசியல்வாதிகளிடம் இருக்கும்

  • ஆப்பு -

    அச்சே தின் ஆத்தே ஹைன்...ஒரு நாளைக்கு 3000 கோடி நோட்டு அடிப்போம் ஹைன்..15 லட்சம் இப்போ போடலை ஹைன்...இன்னும் 4 வருஷத்தில் எல்லோருக்கும் 15 கோடி போட்டுருவோம் ஹைன்...எல்லோருக்கும் வீடு 2022க்குள் ஹைன்...

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    பொங்காதீங்க டுமீல் போராளீஸ்,.... பெருசா பணம் போட்டு தொழில் செய்யுறான், உழைக்கிறான், ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்குறான், பெருசா சம்பாதிக்கிறான்.... ஆனாலும் உங்களுக்கு அம்பானி, அதானி தவிர வேற யாரையும் தெரியாது...

    • Karthik - Chennai,இந்தியா

      இதுக்கும் போராளியில். நீங்க நல்லா வருவீங்க. இதுக்கும் காரணம் உங்க மோடிஜி போதுமா. எல்லோருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement