Advertisement

கணபதியே வருவாய்! டூ -விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் டூ பல பகுதிகளிலும் பக்தர்கள் உற்சாகம்

திருப்பூர்:முழு முதற்கடவுளான விநாயகர் சதுர்த்தி விழா இன்று, அனைத்து பகுதியிலும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.


இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால், கோவில், பொது இடங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும், விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகிறது. அதன் பின், சிலைகள், அருகேயுள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று விசர்ஜனம் செய்யப்படுகிறது. அனைத்து உயிரினங்களும் இந்த மண்ணிலிருந்து தோன்றியவையே. அவை இறுதியில் அந்த மண்ணுக்கே சென்று சேரும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த விசர்ஜனம் நடைபெறுகிறது.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்து முன் னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்பினர் சார்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. அனைத்து முக்கிய கோவில்களிலும், அனைத்து விநாயகர் கோவில்களிலும்,விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுகிறது.
அதிகாலை முதல் சிறப்பு யாகம், சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறுகிறது. வீடுகளிலும் விநா யகருக்கு விருப்பமான அவல், பொறி, கடலை, கொழுக்கொட்டை ஆகியன படைத்து வழிபாடு செய்வர். இதையொட்டி, பூ மார்க்கெட் மற்றும் கடை வீதிகளிலும், சந்தை களிலும், அருகம்புல், பூ மாலை, வெள்ெளருக்கு மாலை, பழ வகை, தேங்காய், பழம் உட்பட பூஜை பொருட்கள் விற்பனை களை கட்டியது.

போலீசார் கண்காணிப்பு
இந்து முன்னணி உள் ளிட்ட பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் சார்பில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. திருப்பூரில், 858 இடங்களும், மாவட்டத்தில், 1,189 இடங்கள் என, மொத்தம், 2,047 இடங்களில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை முதலே, அந்தந்த இடங்களுக்கு, சிலை பொறுப்பாளர்கள் சிலையை கொண்டு செல்ல ஆரம்பித்தனர். அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வைக்கப்படும் சிலைகளை கண்காணிக்கும் வகையில், போலீசார் ரோந்து மேற்கொள்ளவும், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரச்னைக்குரிய இடங்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 'பேட்ரோல்' வாகனங்கள் மூலம் சுழற்சி முறையில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

விசர்ஜன ஊர்வலம்
வரும், 15ம் தேதி பாரத அன்னையர் முன்னேற்ற கழகம், இந்து முன்னேற்ற கழகம், சிவசேனா, இந்து மக்கள் கட்சி (அனுமன்சேனா), இந்து மக்கள் கட்சி (தமிழகம்), தமிழ்நாடு விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பினரும், 16ம் தேதி இந்து முன்னணி மற்றும் 17ம் தேதி பாரத் சேனா சார்பிலும், விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement