Advertisement

பாரதியார் பல்கலையில் தொழில்நுட்ப பயிற்சி 

கோவை:கோவை, பாரதியார் பல்கலை தாவரவியல் துறை மற்றும் இந்திய தேசிய அறிவியல் அகாடமி சார்பில், 'உயிரியல் தொழில்நுட்பம் மூலம் பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு' குறித்து, பேராசிரியர்களுக்கான இரண்டு வார பயிற்சி முகாம் துவங்கியது.

பல்கலை துணைவேந்தர் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், பயிற்சி முகாமை துவங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், உயிர் தொழில்நுட்பம் மூலம் பல்லுயிர் மற்றும் அதன் பாதுகாப்பு குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. பயிற்சி முகாமின் இயக்குனர் எடத்தில் விஜயன், மண்ணுயிர்கள் குறித்து பேசுகையில், ''மண் வளம், நுண்ணுயிர்களின் முக்கிய பங்கு, மண் வளம் பாதுகாக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.
இந்த பயிற்சி முகாமில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு வாரங்கள் நடக்கும் இப்பயிற்சியில், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர். வரும் 24ம்
தேதி இந்த பயிற்சி முகாம் முடிகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement