Advertisement

நொய்யல் ஆக்கிரமிப்புகளை தூக்குங்க!

கோவை:நொய்யல் ஆற்றின் வழித்தடங்களிலுள்ள, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி, மேலும் ஆக்கிரமிப்புகள் சேராமல் பாதுகாக்க வேண்டும் என்று, கலெக்டர் ஹரிஹரன், அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, கலெக்டர் ஹரிஹரன் கூறியுள்ளதாவது:
கோவை மாவட்டத்தில் மழைக்காலங்களில் நொய்யல் ஆற்றின் மூலம், 24 குளங்களில், தண்ணீரை தேக்கி, அந்தந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சமீப காலமாக நொய்யல் ஆற்றின் கரைகளை, பலரும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
இவற்றை அகற்ற, பயோமெட்ரிக் முறையில் கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, கரையோரம் வசிக்கும் மக்களுக்கு, குடிசைமாற்று வாரியத்தின் மூலம், புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலானவர்கள் குடியேறி விட்டனர்.
ஆனாலும் நொய்யலாறு மற்றும் அதற்கு உட்பட்ட குளங்களின் கரையோரமுள்ள, கால்வாய்களை, தனி நபர் ஆக்கிரமிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். மாநகராட்சி அதிகாரிகள், கோட்டாட்சியர், மற்றும் வட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை, அப்புறப்படுத்த வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement