Advertisement

விநாயகர் சிலை பாதுகாப்பு; ரூ.600 கோடி இன்சூரன்ஸ்

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், இன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, விநாயகர் சிலைகள் மற்றும் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் நகைகளுக்கு, 600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.


இதுகுறித்து, விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக, பிரமாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் சிலைகளுக்கு, தங்க நகைகள் அணிவிக்கப்படும். இந்த பண்டிகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.


மும்பையின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்புகளால் நிறுவப்படும் விநாயகர் சிலைகள், நகைகள் பாதுகாப்புக்காக, 600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில், தனிநபர் விபத்துக்கான இன்சூரன்சும் அடங்கும். இந்த தொகை, கடந்தாண்டை விட, 20 சதவீதம் அதிகம்.


மும்பையில், விநாயகர் சதுர்த்தியை பெரியளவில் நடத்தும் அமைப்பாக, ஜி.எஸ்.பி., சேவா மண்டல் திகழ்கிறது. மும்பை, கிங்ஸ் சர்க்கிளில் செயல்படும் இந்த அமைப்பு, இந்தாண்டு, 265 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.


ஜி.எஸ்.பி., சேவா மண்டல் உருவாக்கியுள்ள விநாயகர் சிலை, 90 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகைகளை, வங்கி லாக்கரில் இருந்து எடுக்கும் நேரம் முதல், மீண்டும் லாக்கரில் வைக்கும் வரை, இன்சூரன்ஸ் பாலிசி அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • Loganathan Kuttuva - Madurai,இந்தியா

    மும்பை போன்று புனேயிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. லோகமான்ய திலகர் இதற்காக நல்ல முயற்சி எடுத்தார்.

  • Shanu - Mumbai ,இந்தியா

    In India , there is no security for girl child

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    விநாயகர் மதிப்பே ரூ.600 கோடி தானா

    • Srinivasan N - Chennai,இந்தியா

      நீங்கள் சொல்லும் விலை என்ன?

    • Sudarsanr - Muscat,ஓமன்

      செய்தியை நல்ல படிக்கவும்...

  • Sudarsanr - Muscat,ஓமன்

    கெட்டத்துறை ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் - எதுல தெரியுமா - ஹிந்து சனாதன தர்மத்தை காப்பதில் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டை தாயாய் நேசிப்பதில் ஆர் எஸ் எஸ் தீவிரமாக இருப்பார்கள். உன்னை போன்றவர்களுக்கு அது தெரியாது& புரியாது

  • Sudarsanr - Muscat,ஓமன்

    ஏய் கட்டடத்துறை மனிதனுக்கு எப்பவுமே எல்லாரும் தன்னை போலதான்னு நினச்சுக்குவாங்க. நீ ஆர் எஸ் எஸ் தீவிரவாத இயக்கமுன்னு நினைக்கற. அப்ப நீ?.

  • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

    ரொம்ப நல்லது.. தயவு செய்து பண்ணுங்க.. இல்லாட்டி ஆர் எஸ் எஸ் தீவிரவாதிகள் எல்லாத்தையும் நாசம் பண்ணிட்டு பழியை வெள்ளை பச்சை மீது போடுவானுங்க...

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    'அன்பு' மகனே ஸ்டாலின்... இங்கு எனக்கும் பெரியாருக்கும் மட்டும் விநாயகர் சதுர்த்தி சிறப்பு சித்திரவதைகள் இருக்கின்றதாம்..... ஏன்னு கேட்டேன் விடுமுறை தின வாழ்த்துக்கள் சொன்னதுக்காம்.

  • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

    செவ்வனே சதுர்த்தி கொண்டாடும் சக மனிதர்களுக்கும்.... மாசு கட்டுபாடு காசு தட்டுபாடுனு கூவிட்டே சுன்டல்ல இருந்து கடற்கரை கொண்டுபோக கூடிய வண்டி வரை வாடைகைக்கு விட்டு சம்பாதிக்கும் அந்த பசங்களுக்கும்...... இனிய சதுர்த்தி தின வாழ்த்துக்கள்

    • கட்டத்துரை - ahmadabad ,இந்தியா

      கூடவே, எதுக்கு வாழுறோம்னு தெரியாமல் வாழ்ந்து இங்கே கருத்து சொல்லும் உன்னை மாதிரி ஜென்மங்களுக்கும் சதூர்த்தி தின வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement