Advertisement

நிலுவை ஊதியம் வேண்டும் 'ஆஷா' பணியாளர்கள் மனு

ஊட்டி:ஊட்டியில் 'ஆஷா' பணியாளர்கள் நிலுவை ஊதியத்தை வழங்க
வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யு.சி., சங்க தலைவர் ஆரி தலைமையில், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:நீலகிரி மாவட்டத்தில், சுகாதார துறையின் கீழ், 500க்கும் மேற்பட்ட 'ஆஷா' பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள்,
19 வகையான பணிகளை செய்துவரும் நிலையில், இதுநாள் வரையிலும் அரசு நிர்ணயித்த
ஊக்கத்தொகை குறிப்பிட்ட நாட்களுக்குள் வழங்கப்படவில்லை.
மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், 10 ஆண்டுகளாக
பணியாற்றிவரும் ஆஷா பணியாளர்களுக்கு தீர்வு கிடைக்காததால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
சுகாதார துறை இயக்குனரகம், நீலகிரி மாவட்டத்திற்கு ஜூன் மாதம், 67.18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இருப்பினும், நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், ஊட்டியில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை. எனவே, பாதிக்கப்பட்டுள்ள ஆஷா பணியாளர்களுக்கு, சிறப்பு சலுகையாக இலவச பஸ் பாஸ் வழங்குவதுடன், 10 மாதங்களாக
வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், சலுகைகள் வழங்கவேண்டும். இவ்வாறு,
மனுவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement