Advertisement

சுற்றுச்சூழலை பாதுகாக்க இயற்கை அரண் தேவை

கும்மிடிப்பூண்டி:சுற்றுச்சூழலை பாதுகாக்க, இயற்கை அரணாக மரக்கன்றுகளை அதிக அளவில் வைத்து பராமரிக்க வேண்டும் என, ஆட்சியர் தெரிவித்தார்.கும்மிடிப்பூண்டியில், அதிக அளவில் தொழிற்சாலைகள் இயங்கி வருவதால், காற்றில் மாசு துகள்கள் கலந்து, சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில், கும்மிடிப்பூண்டியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என, வலியுறுத்தப்படுகிறது.இந்நிலையில், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், 100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.


மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறியதாவது:சுற்றுச்சூழலை பாதுகாக்க, இயற்கை அரணாக மரக்கன்றுகளை அதிக அளவில் வைத்து பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement