Advertisement

ஒடிசா மாஜி மந்திரி ஆளும் கட்சியில் இருந்து நீக்கம்


புவனேஸ்வரம்: ஒடிசா முன்னாள் அமைச்சரும் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான பிரதீப் தாமோதர் ராவுத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள முதல்வர் நவீன் பட்நாயக் அமைச்சரவையில் கடந்த 2000 ஆண்டு முதல் 2017 வரை விவசாயத்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்த பிரதீப் தாமோதர் ராவுத், நேற்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.இது தொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், காங். கட்சியுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொண்டு கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட முயன்றதாக புகார் எழுந்ததை தொடர்ந்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    காசு கொடுத்தா ஸ்ட்ரெயிட் கனெக்சன் வைத்து கொண்டார் போல இருக்கிறது

  • Bhaskaran - Chennai,இந்தியா

    இம்மாதிரி ஐந்தாம்படை ஆட்களைக் கொண்டு கட்சியை பலப்படுத்தமுயலும் காங்கிரஸ் எப்படி ஆட்சியைப்பிடிக்க முடியும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement