Advertisement

தமிழக - கேரள சாலை சேதம்; சீரமைப்பதில் மெத்தனம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடி-சுல்தான்பத்தேரி சாலையை சீரமைக்காததால், விபத்து

அபாயம் ஏற்பட்டுள்ளது.
பந்தலுார் சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் மருத்துவ தேவைகளுக்கும், பிற தேவைகளுக்கும் கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி செல்கின்றனர். இவர்கள் பந்தலுாரிலிருந்து சேரம்பாடி, எருமாடு வழியாக செல்லும் சாலையை பயன்படுத்தி வரும் நிலையில், சாலையில் பல இடங்களிலும் சேதம் ஏற்பட்டுள்ளது.
விளக்கலாடி பாலம் அருகே, சாலையோரத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு, சாலை உடைந்துள்ளது. இந்த பகுதியை சீரமைப்பதற்கு பதில், ஓரப்பகுதியில் மண் மூட்டைகள் அடுக்கி தடுப்பு மட்டுமே ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால், மண்ணரிப்பு அதிகரித்து, சாலை முழுமையாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக-கேரள சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement