Advertisement

மாநில வளைய பந்து போட்டி தும்மனட்டி அரசு பள்ளி தேர்வு

ஊட்டி;கோவை எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பாரதியார் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்தன.
ஊட்டி தும்மனட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் வளையப்பந்து போட்டியில் பங்கேற்றனர். இதில், 19 வயதுக்கு உட்பட்டோர் வளையப்பந்து ஒற்றையர் பிரிவில், மாணவி மோனிஷா முதலிடத்திலும், மாணவன் யஷ்வந்த் இரண்டாம் இடத்திலும் வெற்றிபெற்றனர். இரட்டையர் மாணவியர் சங்கீதா பிரியா மற்றும் சவுமியா, மாணவர் பிரிவில், யஷ்வந்த் மற்றும் நித்தீஷ்குமார் முதலிடத்தில் வென்றனர்.
17 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில், நிரஞ்சன் முதலிடமும், தனலட்சுமி இரண்டாம் இடத்திலும், இரட்டையர் மாணவியர் பிரிவில், மோனிஷா மற்றும் தனலட்சுமி, மாணவர் பிரிவில், அபிலாஷ் மற்றும் நிரஞ்சன் ஆகியோர் முதலிடத்தில் வென்றனர்.
14 வயதுக்கு உட்பட்டோர் ஒற்றையர் பிரிவில் மாணவன் சிவராமன் இரண்டாம் இடமும், மாணவி தர்ஷினி மூன்றாம் இடமும் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மாணவர்கள் சாபிக் மற்றும் சிவராமன் முதலிடத்திலும், தர்ஷினி மற்றும் சினேகா மூன்றாம் இடத்திலும் வெற்றிபெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம், மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த, 11 ஆண்டுகளாக, வளையப்பந்து போட்டியில், இப்பள்ளி மாணவ, மாணவியர் மாவட்டம், மண்டலம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement