Advertisement

பள்ளங்கள் நிறைந்த வெங்கல் சாலை

ஊத்துக்கோட்டை:போக்குவரத்து நிறைந்த, சீத்தஞ்சேரி - -வெங்கல் சாலையில் ஏற்பட்டுள்ள மரண பள்ளங்களில் சிக்கி, வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர்.


திருவள்ளூர் நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது, சீத்தஞ்சேரி - -வெங்கல் சாலை.
இச்சாலையில் இருந்து வேளகாபுரம், மாம்பாக்கம், மாளந்துார், மெய்யூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும் இணைப்பு சாலைகள் உள்ளன.குக்கிராமங்கள் அதிகஅளவு கொண்ட இப்பகுதிகளில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களின் முக்கிய தேவைகளுக்கு வெங்கல் சென்று வருகின்றனர்.


மாணவர்களும் தங்களின் மேற்படிப்பிற்கு வெங்கல் செல்கின்றனர். இவர்களின் போக்குவரத்துக்கு சீத்தஞ்சேரி - -வெங்கல் சாலை பயன்படுகிறது.இந்த சாலையில், ஆறு கி.மீட்டர் துாரத்திற்கு தார்சாலை நல்ல நிலையில் உள்ளது.இதில், மாளந்துார் இணைப்பு சாலை பகுதியில்
இருந்து, வெங்கல் வரை சாலைகள் குண்டும், குழியுமாக, மரண பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் தினமும், விபத்துகள் ஏற்படுகின்றன.


இது குறித்து திருவள்ளூர் நெடுஞ்சாலைத் துறையினருக்கு புகார் கொடுத்தும், எவ்வித
நடவடிக்கையும் எடுக்கவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே, மாவட்ட ஆட்சியர், இது குறித்து நடவடிக்கை எடுத்து, சீத்தஞ்சேரி- - வெங்கல் மாநில நெடுஞ்சாலையில், சேதம் அடைந்த பகுதிகளை சீர்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement