Advertisement

முருக பக்தர்கள் பேரவை ஆலோசனை கூட்டம்

ஊட்டி:நீலகிரி மாவட்ட முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையின் ஆலோசனை கூட்டம், ஊட்டியில் நடந்தது.

தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். செயலாளர் பொன்னுசாமி மற்றும் துணைத் தலைவர் துரைசாமி ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அண்மையில் இறைவனடி சேர்ந்த பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அடுத்த மாதம் திருநெல்வேலியில் நடக்கும் மாநில முருக பக்தர்கள் பேரவை அறக்கட்டளையின், நான்காவது மாநில மாநாட்டில், நீலகிரியில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்பது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், லட்சுமணன், சதாசிவம், விஸ்வநாதன், கோபாலகிருஷ்ணன், மணி, மாதன், நடராஜ், பரமசிவம் மற்றும் விவேகானந்தன் உட்பட, பலர் பங்கேற்றனர். இணை செயலாளர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement