Advertisement

முறையாக குடிநீர் வழங்கணும் மதுராந்தகத்தில் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்:முறையாக குடிநீர் வழங்க கோரி, பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படாளம் அடுத்த, பழையனுார் கிராம மக்களுக்கு, இங்குள்ள தொட்டி மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. சில மாதங்களாக, போதுமான அளவு குடிநீர் அளிக்கப்படவில்லை என, கூறப்படுகிறது.


ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக்கிராமத்திற்கு, ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும் என, இப்பகுதியினர் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.இதனால் நேற்று, மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு எதிரே, காலி குடங்களுடன், பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


'எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, முறையாக குடிநீர் வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.அதுகுறித்து விரைவில் பரசீலிப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து, அவர்கள் கலைந்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement