Advertisement

மாட்டு வண்டி ஊர்வலம்: புதுமண ஜோடி அசத்தல்

கோபிசெட்டிபாளையம் : பட்டதாரி பெண்ணை மணம் முடித்த இன்ஜினியர், பாரம்பரிய நாட்டு இன மாடுகளை ஊக்குவிக்க, மாட்டுவண்டியில் ஊர்வலம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


ஈரோடு மாவட்டம், கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்த கவி அரவிந்த், 26, பி.இ., முடித்துள்ளார். இவருக்கும், எம்.சி.ஏ., படித்துள்ள பிரவீணா, 24, என்பவருக்கும் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில்,நேற்று காலை 6 மணிக்கு திருமணம் முடிந்தது.


திருமணம் முடிந்ததும், மணக்கோலத்தில் நாட்டு இன மாடுகள் பூட்டிய வண்டியில் ஊர்வலமாக செல்ல, கவி அரவிந்த் முடிவு செய்தார். சக நண்பர்கள், நாட்டு இன மாடுகள் பூட்டிய, இரட்டை மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்தனர்.


மாட்டு வண்டியில், கவி அரவிந்த் - பிரவீணா தம்பதி ஊர்வலமாக புறப்பட்டனர். பாரியூர் கோவிலில் இருந்து ஊர்வலமாக தங்களது ஊரான வெள்ளாளபாளைத்தை அடைந்தனர்.


கவி அரவிந்த் கூறியதாவது ; எனக்கு வேலைக்கு செல்ல விருப்பமில்லை. மனைவியுடன் இணைந்து விவசாய பணி மேற்கொள்வேன். என் தந்தை மற்றும் முன்னோர், பாரம்பரியமாக மாட்டு வண்டியில் சென்றுதான் திருமணம் செய்துவந்தனர்.


பால் உற்பத்திக்காக, ஜெர்சி மற்றும் கலப்பின ரக மாடுகளை அதிகம் வளர்க்கின்றனர். அதனால், பாரம்பரிய நாட்டு இன மாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்கவும், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மணக்கோலத்தில் ஊர்வலமாக வந்தோம். இவ்வாறு அவர் கூறினார்
Advertisement
 

வாசகர் கருத்து (8)

  • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

    மாட்டு வண்டி பந்தயம் வைப்பதுபோல் மாட்டு வண்டி பயணம் செய்யவேண்டும். நன்றி தினமலர்

  • Arivu Nambi - madurai,இந்தியா

    மாட்டுவண்டி , வயல்வரப்பு ,மரங்கள் ,செடிகள் ,கொடிகள் ,தண்ணீரின் மெதுவான அலையும் இசை ஓடும் இசை ,பல வகையான பறவைகளின் ஒலி மாப்பிள்ளையும் பொண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் ............... என்ன ஒரு இனிமை ....இயற்க்கைக்கு இணையாக ஒன்றும் இருக்கமுடியாது ....கடவுள் படைத்த இயற்கையுடன் இணைந்து எல்லாவளமும் பெற்று நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

  • ருத்ரா -

    வாழ்க மணமக்கள்.பெட்ரோல் விக்கற விலைக்கு அனைவரும் அந்த நாளும் வந்திடாதோ என்று இவர்களைப் போல் வண்டியை பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

  • MaRan - chennai,இந்தியா

    நீடுழி வாழ வாழ்த்துகள்

  • அன்பு -

    BE படிச்சுட்டு எவனுக்கு வேலை இருக்கு... விவசாயம் தான் ஒரே வழி.. வேலை கிடைக்கல அப்டிங்றத மாப்ள கெத்தா வேலைக்கு போக பிடிக்கலனு சொல்லி சமாலிக்றாரு ஹா ஹா ஹா

  • joy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    நீடூழி வாழ்க. வளமுடன் வாழ்க .

  • chennai sivakumar - chennai,இந்தியா

    Super mappillai. God bless both of you for a wonderful wedded life

  • Meenu - Chennai,இந்தியா

    புது தம்பதிக்கு வாழ்த்துக்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement