Advertisement

போலீஸ் வாக்கிடாக்கி உடைப்பு போதை நபர்கள் இருவர் கைது

எம்.கே.பி.நகர்:போலீஸ்காரரை தாக்கியதோடு, அவரது வாக்கிடாக்கியை உடைத்த, போதை ஆசாமிகள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.


சென்னை, வியாசர்பாடி, கென்னடி நகரைச் சேர்ந்தவர்கள், கவுதம், 25, ஜெகதீஸ், 28. இவர்கள், நேற்று மதியம், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, எஸ்.ஏ.காலனி அருகே உள்ள, 'டாஸ்மாக்' பாரில் மது குடித்தனர். பின், காசு கொடுக்காமல், பார் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
பார் ஊழியர்கள், எம்.கே.பி.நகர் போலீசுக்கு தகவல் அளித்தனர். எஸ்.ஐ., ஞானதாஸ் விரைந்து சென்று, இருவரிடமும் விசாரணை நடத்தினார். இருவரும், ஞானதாசை தாக்கியதோடு, அவரது மொபைல்போன், வாக்கிடாக்கியை உடைத்தனர்.


இதுகுறித்து, ஞானதாஸ் கொடுத்த தகவலின் படி, போலீசார் சென்று, போதை நபர்கள் இருவரையும் பிடித்தனர். பொது சொத்துகளை சேதப்படுத்தல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவில், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement