Advertisement

குவியும் 'பிளாஸ்டிக்' கழிவுகள் வனச்சுழல் பாதிக்கும் அபாயம்

கூடலுார்:கூடலுார், ஊசிமலை அருகே, வனங்களில் சுற்றுலா பயணிகள் வீசி செல்லும், 'பிளாஸ்டிக்' கழிவுகளால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கூடலுார் ஊசிமலை காட்சி முனைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், முதுமலை, கூடலுார், நடுவட்டம் பகுதிகளில் வனம் சார்ந்த இயற்கை சூழலை ரசித்து செல்கின்றனர். அதே போன்று, இப்பகுதியில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வானுயர்ந்த கற்பூர மரங்களையும் ரசித்து செல்கின்றனர்.
இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தும் சுற்றுலா பயணிகள் பலர், உணவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால், சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பகுதி மட்டுமின்றி, கூடலுார் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் வீசி செல்வதை தடுக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement