Advertisement

விமானத்தில் பார்சல் சேதம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை:பார்சல்கள் சேதமடைந்த பிரச்னையில், விமான நிறுவனம், பயணிக்கு இழப்பீட்டுடன் சேர்த்து, 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், வேளச்சேரி, புளியந்தோப்பைச் சேர்ந்த, தினகரசுந்தர் தாக்கல் செய்த மனு:


டில்லியில் இருந்து சென்னைக்கு, தனியார் விமானத்தில் பயணித்தபோது,எனதுபார்சல்களை காணவில்லை.பிறகு தேடிக்கொடுத்தனர். பார்சலில் இருந்த டிராலியில், கைப்பிடி உடைந்திருந்தது. இது குறித்து, விமான நிறுவனத்தின், சென்னை அலுவலகத்தில் புகார் செய்தும் கண்டுகொள்ளவில்லை. இரண்டுலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.


நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவு:விமான நிறுவனத்தின் சேவையில் குறைபாடு உள்ளது. மனுதாரருக்கு, சேதமடைந்த பொருட்களுக்காக, 10 ஆயிரம் ரூபாய், இழப்பீடு, 10 ஆயிரம் ரூபாயுடன், வழக்கு செலவு, 5,000 ரூபாயை, விமான நிறுவனம் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • sahayadhas - chennai,இந்தியா

    தினகரன் தனிப்பட்ட திறமைக்கு வாழ்த்துகள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement