Advertisement

5 பேருக்கு 5 நாள் போலீஸ் 'கஸ்டடி'

கோவை: கோவையில், சில இந்து இயக்க தலைவர்களை கொல்லும் சதி திட்டத்துடன், சென்னையில் இருந்து வந்த ஜாபர் சாதிக் அலி, 29, இஸ்மாயில், 25, சம்சுதீன், 20, சலாவூதீன், 25, கோவை ஆசிக், 25, குனியமுத்துார் அன்வர், 23, ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அன்வரை தவிர மற்ற ஐந்து பேரையும், போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில், போலீசார் தாக்கல் செய்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சக்திவேல், ஐந்து பேரையும், ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதியளித்து, உத்தரவிட்டார்.
இதற்கிடையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில், 20 ஆண்டுகளுக்கு
பின் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி ரஷீத்தை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு, நேற்று, கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement