Advertisement

மானியத்தில் இரு சக்கர வாகனம் பெற வாய்ப்பு

ஊட்டி:இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற, பயனாளிகள் உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:மாநில அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தில் பணிக்கு செல்லும், சுய தொழில் செய்யும் மகளிருக்கு, 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாய் வழங்கி, மானியத்தில் இருசக்கர வாகனம் பெற அரசு உதவி புரிகிறது.
2017---18ம் ஆண்டிற்கான ஒதுக்கீடாக, 1,074 பயனாளிகளுக்கு மானியம் வழங்க அரசு ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், 246 பயனாளிகள் மட்டுமே இருசக்கர வாகனம் வாங்கி மானியத்திற்காக விண்ணப்பித்துள்ளனர். ஏனைய பயனாளிகள் மானியம் கோரி விண்ணப்பிக்க தவறியதால், அடுத்த ஆண்டிற்கான ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது தாமதமாகிறது. பயனாளிகள், அக்., 15க்குள் இருசக்கர வாகனங்களை கொள்முதல் செய்து மானியம் கோர தவறும் பட்சத்தில், அவர்கள் பயனாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு புதிய பயனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.எனவே உரிய காலக் கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement