Advertisement

பிளாஸ்டிக் கூரை; மூங்கில் படி!டூ பழங்குடியினர் வசிக்கும் கிராமத்தில்... டூ அடிப்படை வசதிகளுக்கு போராட்டம்

பந்தலுார்:பந்தலுார் அருகே, பாலாவயல் பழங்குடியின கிராமத்தில், அடிப்படை வசதிகளுக்காக
மக்கள் போராடி வருகின்றனர்.
பந்தலுார் சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாலாவயல் கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகே, பிற சமுதாய மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளும் உள்ளது. இங்கு மட்டும், சிமென்ட் நடைபாதை, தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால், பழங்குடியின கிராமத்தில் எவ்வித அடிப்படை வசதிகளும் செல்லவில்லை. இங்கு வரும் அதிகாரிகள், பழங்குடியினரிடம் மனுவை மட்டும் வாங்கி செல்கின்றனர்.
இங்குள்ள வீடுகள் மழையால் மிகவும் சேதமடைந்து, தண்ணீர் கசிவு ஏற்பட்டுகிறது. 'பிளாஸ்டிக்' மற்றும் தார்ப்பாய் போர்வை கொண்டு அதனை மூடி வைத்துள்ளனர். கிராமத்திற்கு நடைபாதை இல்லாததால், மூங்கில் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு, மக்களே படிக்கட்டுக்களுடன் கூடிய பாதையை அமைத்துள்ளனர். தண்ணீருக்காக மிகவும் தாழ்வாக உள்ள பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தெருவிளக்கு பழுதடைந்து பல மாதங்கள் கடந்துள்ளதால், இரவில் நடமாடுவதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதுவரை சீரமைக்க யாரும் முன்வரவில்லை.
கிராம மக்கள் கூறுகையில், 'அனைத்து அதிகாரிகளும், கிராமத்தை ஒட்டிய பகுதிக்கு வந்தபோதும், எங்களின் கிராமத்துக்கு பணிகளை செய்ய முன் வருவதில்லை.தேர்தலின் போது மட்டும் வேட்பாளர்கள் வருகின்றனர். மாவட்டத்தில், புறக்கணிக்கப்பட்ட பகுதியாக எங்கள் கிராமம் உள்ளது' என்றனர்.
பழங்குடி நலச்சங்க நிர்வாகி நீலகண்டன் கூறுகையில், ''கூடலுார், பந்தலுாரில் இது போன்று, பல கிராமங்கள் இருந்தும், அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மத்திய, மாநில அரசுகளின் நிதி எங்கே செல்கிறது என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
அடிப்படை வசதியான, நடைபாதை; தெரு விளக்கு, சுகாதாரமான தண்ணீர் கூட இந்த கிராமத்தில் இல்லை. இவைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement