Advertisement

13 குடிசை வீடுகள் எரிந்து நாசம்

சேத்துப்பட்டு:மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், 13 குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமாயின.


சேத்துப்பட்டு, மங்களபுரம், 1வது தெரு மற்றும் ராஜாம்பாள் தெருவில், 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள், குடிசை வீடுகளில் வசித்து வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம், திடீரென, ஒரு குடிசை வீட்டில் தீப்பற்றியது. மளமளவென பரவிய தீ, அப்பகுதி முழுவதும் பற்றி எரிந்தது.
சம்பவம் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் தீயணைப்பு படையினர், அரை மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர்.


இதில், 13 குடிசை வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள், பீரோ, சமையல் பாத்திரங்கள் என அனைத்தும், முற்றிலுமாக எரிந்து நாசமாயின.தீ விபத்தில், வீடுகளை இழந்து தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள், தற்காலிகமாக தங்குவதற்கு கூட, அரசு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.அதிகாரிகளின் அலட்சிய போக்கு, அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி
உள்ளது. சம்பவம் குறித்து, தீயணைப்பு படையினர் விசாரித்ததில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறினர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement