Advertisement

கொலை வழக்கில் சித்துவுக்கு சுப்ரீம் கோர்ட், 'நோட்டீஸ்'

புதுடில்லி: 'கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, ஏன் தண்டனை வழங்க கூடாது' என கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளது.


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், காங்., தலைவருமான சித்து, தற்போது, பஞ்சாப் மாநில அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவர், 1988ல், சாலையில் ஏற்பட்ட சண்டையில், 65 வயதான குர்னாம் சிங் என்பவரை தலையில் தாக்கினார்.


இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பின், மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக, குர்னாம் சிங் உயிரிழந்தார். இதையடுத்து சித்து மீது, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், சித்துவுக்கு, மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.


ஜாமினில் வெளியே வந்த சித்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில், 2007ல், சித்துவை விடுவித்து, உச்ச நீதிமன்றம், உத்தரவிட்டது. இந்நிலையில், குர்னாம்சிங் கொலை வழக்கில், நீதி மறுக்கப்பட்டதாக கூறி, பாதிக்கப்பட்டவர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கு, நீதிபதிகள், ஏ.எம்.கான்வில்கர், சஞ்சய் கிஷண் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்துவுக்கு ஏன் தண்டனை வழங்க கூடாது என கேள்வி எழுப்பி, நீதிபதிகள், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  \\\\ இவர், 1988ல், சாலையில் ஏற்பட்ட சண்டையில், //// கோர்ட்டுங்க என்னா சுறுசுறுப்பு ..... என்னா சுறுசுறுப்பு ?

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  இந்த ...கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நம் பிரச்சினை செய்தோமென்றால் நமக்குத்தான் கேவலம்.

 • srikanth - coimbatore,இந்தியா

  2004 -2014 வரைக்கும் பிஜேபி Amristar MP யா இருந்த போது எப்படி இந்த ஆறுத பழசான 1988 கேஸ் ல உங்கள காப்பாத்தினோம் . அதா பத்தி கொஞ்ச நாரி கூட இல்லாம பிஜேபி விட்டு 2016 ல போனீங்க .அதுவும் காங்கிரஸ் ஜெயிச்சு பஞ்சாப் மினிஸ்டர் வேற ஆஹிடீங்க. ஒழுங்கா BJP லேயே இருந்திருந்தா 1988 நடந்த கேஸ இப்ப எதுக்கு தூசு தட்டி எடுக்க போராம். பஞ்சாப் ல தோட்டத்துக்கு உங்கள பழி வாங்காம விட மாட்டோம் . இப்ப இம்ரான் கான் கூப்பிட போது, எதுக்கு போனீங்க. ஆடு ஏன் கேட்ட போது, வாஜ்பாய் , மோடி போனாங்களே அப்படினு தெனாவெட்டா பேட்டி வேறு கொடுத்த சும்மா விடுவோமா நாங்க ?

 • நக்கல் -

  சித்துவை பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டு ஜாதவை திரும்ப பெறவேண்டும்.. அவருக்கும் தண்டனை நமக்கும் லாபம்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  திட்டமிட்ட கொலை அல்லவே ...

 • Muruga Vel - Chennai,இந்தியா

  அவர் பிஜேபியை விட்டு காங்கிரசுக்கு வந்து பரிசுத்தமாயிட்டாரு …. அப்புறம் எதுக்கு தண்டனை ….

 • Bhaskaran - Chennai,இந்தியா

  இத்தனை நாள் இந்த கொலைகாரனை வெளியில் விட்டதே தப்பு பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு இருந்தால் நாள்குறித்து ஒருவரை திட்டம் போட்டு கொன்று எளிதாக வெளியில் உலாவலாம் இதுதான் இந்தியா

 • sivan - Palani,இந்தியா

  இனிமே பாகிஸ்தான் காரனை கண்டா கட்டி பிடிப்ப?? பாகிஸ்தான் காரண கண்டா பாசம் பிய்த்துக் கொண்டு போகுது? நம்மூர் காரனை ரோட்டில் நடந்த ஒரு சின்ன தகராறுக்கு .. சாகும் அளவுக்கு தலையில் அடிக்கத் தோணுமா?

 • s t rajan - chennai,இந்தியா

  செத்தாரு... சித்து.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  He shouldn't not have been let off.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement