Advertisement

தொலைநிலை கல்விக்கு யு.ஜி.சி., அனுமதி

சென்னை:தொலைநிலை கல்வி படிப்புகளுக்கு அனுமதி பெற, நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து, சென்னை பல்கலை பதிவாளர், சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், ஒப்புதல் கிடைக்கவில்லை என, சில செய்திதாள்களில் செய்திகள் வெளியாகிஉள்ளன.


யு.ஜி.சி.,யின், 2017ம் ஆண்டு வரைமுறைகளின்படி, தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை நடத்துவதற்கு, அனுமதி பெற்றுள்ள சில பல்கலைகளில், சென்னை
பல்கலையும் ஒன்று.நடப்பு கல்வி ஆண்டில், 51 இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை, தொலைநிலையில் நடத்துவதற்கு, யு.ஜி.சி.,யிடம் ஒப்புதல் கேட்டு, சென்னை பல்கலை விண்ணப்பித்தது.


இவற்றில், மூன்று படிப்புகளுக்கு மட்டும், முதற்கட்டமாக அனுமதி கிடைத்துள்ளது. மற்றவைகளுக்கு, சில குறைகள் இருப்பதால், அவற்றை ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யுமாறு, யு.ஜி.சி., அறிவித்தது.இதன்படி, அந்த குறைகளை, சென்னை பல்கலை நிவர்த்தி செய்துவிட்டு, மீதமுள்ள படிப்புகளுக்கும், ஒப்புதல் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். இன்னும் ஒரு வாரத்தில், யு.ஜி.சி.,யில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement