Advertisement

பாம்பனில் உள்வாங்கிய கடல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் திடீரென கடல் உள்வாங்கியதால் நாட்டு படகுகள் தரை தட்டிநின்றன. பாம்பன் சின்னபாலம் கிராமத்தில் 300க்கு மேலான மீனவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கடற்கரையில் நேற்று காலை திடீரென 100 மீட்டர் துாரத்திற்கு கடல் உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் கடல் சிப்பிகள், நண்டுகள் கடல்நீரின்றி தவித்தது, கடற்கரையில் நிறுத்தி இருந்த நாட்டுபடகில் 20 படகுகள் தரை தட்டி நின்றது.இப்படகை மீட்க முடியாமல் போனதால், நேற்று காலை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் நேற்று மாலை கடல்நீர் மட்டம் உயர்ந்ததும், சின்னபாலம் கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது.2004ல் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப பாம்பன் கடல் உள்வாங்குவது சகஜமாகி விட்டது என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement