Advertisement

'ஆட்சிக்கு ஆயுள் இன்னும் இருபது நாட்கள் தான்' : புகழேந்தி புது ஆரூடம்

கொடைக்கானல்: அ.தி.மு.க., அரசு இன்னும் 20 நாட்களில் கவிழும்' என, அ.ம.மு.க., கட்சியின் கர்நாடக மாநில நிர்வாகி புகழேந்தி தெரிவித்தார்.
கொடைக்கானலில் அவர் கூறியதாவது: பழனிச்சாமி ஆட்சி தொடர்வதில் ஓ.பி.எஸ்., தரப்பினருக்கு உடன்பாடில்லை. பிரதமர் மோடி முன்னிலையில் இரண்டரை ஆண்டு ஆட்சியாக சரிபாதியாக பிரித்து ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆட்சி காலம் முடிந்தும், அவர் பதவி விலகாததால் ஓ.பி.எஸ்., தரப்பினர் கோபத்தில் உள்ளனர். இதனால் இன்னும் 20 நாட்களில் ஆட்சி கவிழும். 18 எம்.எல்.ஏ.,க்கள் தீர்ப்புக்கு பின்பு 70 எம்.எல்.ஏ.,க்கள், 10 அமைச்சர்கள் தினகரன் தலைமையை ஏற்பார்கள். 8 அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவதை யாராலும் தடுக்க முடியாது.
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ரூ. 360 கோடி ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையில் அளித்துள்ளோம். சி.பி.ஐ., விசாரணை நடக்கிறது.
கர்நாட உள்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு வந்தவுடன் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலகினார். குற்றம் நிரூபிக்கப்படாததால் மீண்டும் அமைச்சர் ஆனார். அவ்வாறு ஏன் விஜயபாஸ்கர் செய்யவில்லை.
இடைத்தேர்தலில் அ.ம.மு.க., இமாலய வெற்றி பெறும், என்றார்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Durai -

    சம்பூர்ண யோக்கிகயர் வாரரு ....எதையோ விளக்கி வையுங்கள் என்பார்கள் அது போல வந்துட்டான் ஜோசியம் சொல்ல ....இதையே கேட்டு கேட்டு புளித்து விட்டது

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    இமாலய வெற்றி பெற்று, கரி பூசப்போவது யார் முகத்தில்? பாவம் அந்த குடும்பம். இலவு காத்த கிளி ஆகும் போல் இருக்கே.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement