Advertisement

மகா கும்பாபிஷேக விழா

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே கஸ்துாரிபாளையம் ரோட்டில் உள்ள பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

நேற்று காலை, புனிதநீர் கலசங்கள் கோவிலை சுற்றி எடுத்து வருதல் ஆகிய நடந்தன. காலை, 9:00க்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கூடலுார் கவுண்டம்பாளையத்தில் உள்ள வாராஹி மந்தராலய பீடாதிபதி வாராஹி மணிகண்ட சுவாமிகள் தலைமை வகித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement