Advertisement

கன்னியாஸ்திரி மர்மசாவு: போலீசார் விசாரணை

துாத்துக்குடி: கிறிஸ்துவ சபையில் கன்னியாஸ்திரி மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரித்தனர். துாத்துக்குடி, மில்லர்புரத்தில் 'தி பெந்தேகோஸ்தே சபை' கிறிஸ்தவ மையம் செயல்படுகிறது.அங்கு கன்னியாஸ்திரிகள், போதகர்கள் தங்கியுள்ளனர்.
சென்னை ஆவடியை சேர்ந்த பாஸ்கர் மகள் நித்யா, 23, கன்னியாஸ்திரி, அங்கு கடந்த 2 ஆண்டுகளாக தங்கியிருந்தார். நேற்று அவரது அறையில் இறந்து கிடந்தார்.
அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறி சபையினர் அவரது உடலை அடக்கம் செய்ய முயற்சித்தனர். அவரது இறப்பில் சந்தேகம் இருக்கலாம் என தகவலால், வி.ஏ.ஓ., செந்தில் புகார் அளித்தார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
போதகர் கொலை
இதே பெந்தேகோஸ்தே சபையில் 2016ல் போதகராக இருந்த பெரம்பலுார் மாவட்டம் மங்களாபுரத்தை சேர்ந்த கனகராஜ், 65, கொலை செய்யப்பட்டார். ஆனால் அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக புகார்கள் எழுந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டது ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ஊர்ஜிதமானது. அதே சபையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப் பட்டது அதிர்ச்சியை
ஏற்படுத்தியது.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Bhaskaran - Chennai,இந்தியா

    கொஞ்சம் யோக்கியமான வருமானம் அதிகமில்லாத சபை பெந்தேகொஸ்தேசபை அதில் இப்படியென்றால் தேவன்தான் நடவடிக்கைஎடுக்கணும்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement