Advertisement

கோடிகளை குவித்த ஆர்.டி.ஓ., அதிகாரி; புரோக்கர் வீட்டில் ஆவண புதையல்

கள்ளக்குறிச்சியில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு, கோடிக்கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் தெரியவந்துள்ளது. இவருக்கு, புரோக்கராக செயல்பட்ட செந்தில்குமாரின், சேலம் ஆத்துார் வீட்டில் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின.


கடலுார், தவுலத் நகரைச் சேர்ந்தவர், பாபு, 52. விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.


கள்ளக்குறிச்சியில் கைது :




இவர் தகுதிச்சான்று வழங்க, 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது, நேற்று முன்தினம் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரால், கள்ளக்குறிச்சியில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடலுாரில் உள்ள அவரது வீட்டில், கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அதில், 33.50 லட்சம் ரூபாய், 15 கிலோ வெள்ளி, 140 சவரன் நகைகள், 45 வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான புத்தகங்கள் கைப்பற்றப் பட்டன.


மேலும், ஆறு வங்கி லாக்கருக்கான சாவி மற்றும் பல கோடி ரூபாய்க்கு வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகளுக்கான ஆவணங் களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகங்களில், 60 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.


வங்கி லாக்கரில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு சொத்துகளுக்கான ஆவணங்கள் மற்றும் நகைகள் வைக்கப்பட்டு
இருப்பதும் தெரிய வந்துஉள்ளது. இருப்பினும், வங்கி களின் அனுமதியுடன் அவற்றை திறந்து பார்த்த பிறகே, உண்மை மதிப்பு தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.


கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், பாபு வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் உட்பட அனைத்து ஆவணங்களையும், நேற்று முன்தினம் இரவு, விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 45 வங்கி கணக்குகளை முடக்கி வைக்க, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


ஆவண புதையல் :




மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவுக்கு, 13 ஆண்டுகளாக புரோக்கராகவும், பினாமியாகவும் இருக்கும், சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த, ஜோதிடர் செந்தில்குமார், 44, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்.அவரது வீட்டில், நேற்று முன்தினம் மாலை, 4:30 முதல், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை மேற்கொண்டனர். இது, அதிகாலை, 2:30 மணி வரை நடந்தது.


ஜோதிட அறை உள்ளிட்ட இடங்களில் இருந்த ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதில், ஸ்ரீருத்ர கங்கா பைனான்ஸ் மற்றும் ஸ்ரீருத்ர கங்கா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட், தொழுதுார் கிரீன்பார்க் பள்ளியில், பங்குதாரராக உள்ள ஆவணங்கள் மற்றும் அறக்கட்டளை ஆவணங்கள் சிக்கின.


செந்தில்குமாரின் மனைவி கவிதா பெயர்களில், 2 கோடி ரூபாய்க்கு, நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிந்தது. அதற்கு, வரி செலுத்தியபோதும், முதலீடு செய்துள்ள வருவாய்க்கு ஆதாரம் இல்லை. வீட்டிலிருந்து, 15 வங்கி கணக்குகளின் சேமிப்பு கணக்கு புத்தகம், 150 சவரன் நகைகள் உட்பட,33 கோடி ரூபாய் மதிப்புக்கும் அதிகமான சொத்துகளின் ஆவணங்கள் சிக்கி உள்ளன.


இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ஆத்துாரில், 2006ல் பாபு பணிபுரிந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த
புகாரில், செந்தில்குமார் வீட்டில், 62.62 லட்சம் ரூபாய்க்கு, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில், சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், பாபு மீது வழக்கு நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சசிகலா குடும்ப ஜோதிடர் : செந்தில்குமார், கேரளாவின் பிரசன்ன ஜோதிடம் பார்ப்பது வழக்கம். 2008 முதல், சசிகலாவின் குடும்பத்தை சேர்ந்தவர்கள், தினகரன் ஆதரவு, முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பூங்குன்றன், எம்.பி.,க்கள், அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலருக்கு, குடும்ப ஜோதிடராக உள்ளார். இவர்கள், செந்தில்குமாரிடம் ஆலோசித்து, முக்கிய கோவில்களில் நடக்கும் பரிகார பூஜையில் பங்கேற்பர்.

வாரிசு வேலையில் வந்தவர் : கடலுார், செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்த, பாபுவின் தந்தை சுப்ரமணியன். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், உதவியாளராக பணிபுரிந்தார். அவர் இறந்ததால், 1991ல், பாபுவுக்கு, தமிழக அரசு, வாரிசு வேலை வழங்கியது. 1998 முதல், மோட்டார் வாகன ஆய்வாளராக, பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகிறார். 2006ல், சொத்து குவிப்பு புகாரில் வழக்கு பதிவானதால், பதவி உயர்வின்றி பணிபுரிகிறார். பாபுவின் இரு மகள்கள், மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கின்றனர். தம்பி செந்தில், ஆத்துார், விழுப்புரத்தில், இரு, நான்கு சக்கர வாகனங்கள் விற்பனை செய்கிறார். தங்கை ஜெயலலிதா, அவரது கணவர் ராஜேந்திரன், உளுந்துார்பேட்டையில், 'டிரைவிங் ஸ்கூல்' நடத்துகின்றனர். ஆய்வின்போது, ஏராளமான ஆவணங்கள் கிடைத்துள்ளதால், குடும்ப உறவினர்களிடம், போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர்.

- நமது நிருபர் -
Advertisement
 

வாசகர் கருத்து (65)

  • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    இவனை மட்டுமல்ல, அவன் மனைவி , மகள்கள் அனைவரையும் சிறையில் அடைக்கவேண்டும். லஞ்சம் வாங்கும் பணத்தில் மருத்துவம் படிக்கமாட்டேன் என்று அவன் மகள்கள் சொல்லியிருந்தால் இவன் இவ்வளவு பேராசை பட்டிருக்கமாட்டான். 2006 இல் பிடிபட்ட இவனை 12 வருடம் பணியில் வைத்துள்ள சட்ட முறைகளை முதலில் மாற்றவேண்டும்.

  • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

    இந்த ஒரு அதிகாரியே இவ்வளவு சம்பாத்தியம் என்றால் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு ஊரிலும் எவ்வளவு வருமானம் வரும்? இவர்கள் இவ்வளவு காசு பாத்தா அரசியல் வியாதிகள் எவ்வளவு பார்க்கும் ? கனக்குப் போட்டால் கால்குலேட்டர் error (தவறு) என்று காண்பிக்கும் அவ்வளவு கோடி தேறும் . நாங்க ஒரு 5 மாட வெச்சுகிட்டு தீவனம் போடா முடியாம திண்டாடுகிறோம் . ஊருக்கு உண்ண பால் கொடுக்கும் எங்களால் 3 வேலை உண்ண முடியவில்லை . இந்த நாதாரிகள் கோடிகளில் புரளுகிறார்கள் . அது தான் தெரிந்து விடடாதே சொத்தை பிடுங்கி அவனை போட்டுத் தள்ளினாள் அடுத்தவனுக்கு பயம் வரும் . இல்லாவிடில் இது தொடர்கதை தான் இதற்கு முடிவே வராது . உடனடி மரண தண்டனை அதுவும் சாலையில் வைத்து வழங்க வேண்டும் அப்படி ஒரு நிலை வரும் வரை லஞ்சம் குறையாது .

  • Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா

    Only a way out to stop corruption is to give a strong punishment if the corruption charges are proved. The punishment should be to remove one leg and one hand treat him well and release him so that for his life time he will not forget his crime and repent. Putting inside the jail and feeding him is only a waste of our money. Unless and until the punishments are severe we will not be able to stop this corruption. There should only one Court for these corruption case and no further appeal must be allowed on the verdict otherwise the accused will die naturally before the final verdict comes.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    ரமணா திரைப்பட பாணியில் ஒரு பத்து பேரை போட்டால் தான் இந்த நாடு கொஞ்சமாக திருந்தும்.

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    இவரை துருவி துருவி விசாரித்தால் மற்ற மஹாப்ரபுக்கள் எல்லாம் மாட்டி கொண்டு தான் செய்த காரியத்திற்கு தண்ணீர் குடிப்பார்கள் .

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    கருணைk அடிப்படியில் இந்த முட்டாளுக்கு அரசாங்கம் வேலை கொடுத்து அரசுக்கும் பொது மக்களுக்கும் கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் இருந்து உள்ளான் வீட்டில் உன்னை யாரும் செக் பண்ண மாட்டாங்களா

  • Viswanathan - karaikudi,இந்தியா

    இதற்காகத்தான் பெரியார் மிகவும் பாடு பட்டார் . சமத்துவம் . இவர்கள் சமூக நீதி படி நடந்து கொள்கிறார்கள் . நோகாமல் பணம் பண்ணும் வழி இவர்களுக்கு தெரிந்திருக்கிறது . சட்ட ரீதியாக எதிர்கொள்ள தைரியம் உள்ளது . வாழ்க இவர் தம் வளர்ச்சி . இவர்களை கைது செய்வதால் எந்த பலனும் இல்லை . இவரின் குடும்பத்தினரை தான் தண்டிக்க வேண்டும் . பொங்காவில் நடை பயிற்சியின் போது ஒருவர் பேசிக்கொண்டு போனது காதுகளில் ஒலித்து கொண்டு இருக்கிறது . "இட ஒதுக்கீடு இல்லையென்றால் நானெல்லாம் அரசு பணியில் சேர்ந்து நிறைய சேர்த்திருக்க முடியாது . " நாலு பேர் காதுபட பேசுவதே தெரியாமல் அந்த நபர் பீற்றி கொண்டு சென்ற போது , நான் நினைத்தேன் , கடவுளே நினைத்தாலும் இந்நாட்டை காப்பாற்ற முடியாது

  • ashok kumar - coimbatore,இந்தியா

    45 வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான புத்தகங்கள்.....

  • பாசிச பி.செ.பிதன் - தூத்துக்குடி ,இந்தியா

    அகப்படறவன் எல்லாம் அதிமுக அல்லது திமுகவா இருப்பான்,கண்டிப்பா காங்கிரசாவோ அல்லது குறிப்பா பிஜேபி கட்சிக்காரனாவோ இருக்கவே மாட்டான்.

  • Ezhichavayan Eazhai - thiruchi,இந்தியா

    பெரும்பாலான அரசு ஊழியர்கள் இப்படித்தான் சொத்து சேர்த்திருப்பார்கள் ஆச்சர்யம் வேண்டாம் இவர்களிடம் இருந்து அனைத்து சொத்துக்களையும் பிடுங்கி ஏழை கிராமவாசிகளுக்கு அரசு கொடுக்கவேண்டும் இப்படிப்பட்ட கயவாளிப்பயலுகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை மிகக்கொடூரமாக இருக்கவேண்டும் முதலில் பொது ஜனம் இதற்க்கு உடன்படுமாஎன்பதே கேள்வி

  • Abdul rahim - Thanjavur,இந்தியா

    எல்லா மாவட்ட rto வும் கோடிகளை குவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்

  • raja - Kanchipuram,இந்தியா

    இவன்கள் மட்டும் அல்ல 90 சதவீத அதிகாரிகள் அயோக்கியர்களே. அவர்களை ஒழிப்பதே நாட்டிற்கு செய்யும் நல்லது. அதை யார் செய்வது.

  • Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா

    இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டில் சொத்து குவிப்பு வழக்கு பதிவு , சரி ஏன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவில்லை ? இப்போது இரண்டாயிரத்தி பதினெட்டாம் ஆண்டு நடக்கிறது . பன்னிரண்டு ஆண்டுகள் வரை இவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கவில்லை . எல்லாம் மேலிடத்து ஆசீர்வாதம் . போலீசின் ஆசீர்வாதம் இருந்தால் தான் இப்படி கொள்ளையடிக்கமுடியும் . இது போல் ஆயிரம் கொள்ளைகள் நடந்து உள்ளன யாருக்கும் தண்டனை கிடைக்காது

  • sethu - Chennai,இந்தியா

    ஆண்டவா இவனுக்கு இன்னும் கொடு ஜெய் சக்தி ,

  • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

    அது என்ன எப்ப பார்த்தாலும் தி.மு.க ஆதரவு அலுவலர்களை மட்டுமே லஞ்ச வழக்குகளில் கைது செய்வது.நாங்கள் என்ன இழிச்சவாயர்கலா? இனி இப்படி செய்தல் எங்கள் ஆதரவு தி.மு.க நீதிபதிகளிடம் சொல்லி இரவு 12.30 மணிக்கு நீதிமன்றத்தில் தடை வாங்குவோம்.

  • Srinivasachari Raghavan - Bangalore,இந்தியா

    அரசாங்கத்திற்கு போக்குவரத்து மற்றும் சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அப்போ அப்போ ரெய்டு நடந்தாலும் முற்றுமாக லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை. ஆகையால் புரோகார்களை அலுவலக வளாகத்தில் அனுமதிக்க கூடாது. மக்களிடமிருந்து லஞ்சம் பெறுவதில் இவ்விரு அலுவலகங்களும் போட்டி போட்டுகொண்டு வசூலிக்கின்றன

  • Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா

    இந்த புண்ணியவானை மாதிரி எத்தனை பேர் வட்டார போக்குவரத்து அலுவலகம் பத்திர பதிவு அலுவலகம் இந்து அறநிலைய ஆட்சி துரை அலுவலகம் இன்னும் எத்தனையோ இதை பிடிக்க வேண்டியவர் பொறுப்பை உணர்ந்து செயல் pad

  • sahayadhas - chennai,இந்தியா

    இவனை மாட்டிவிட்ட புண்ணியவாள் நீங்க நீடூடி வாழ்க .உங்கள் சேவை தொடர்க சற்று கவனமாக இருக்கவும் திருடன் எப்போதும் எதிர்தாக்குதல் தொடுக்கலாம்

  • sahayadhas - chennai,இந்தியா

    ஏழை Cab driver களை பயமுறுத்தி வாங்கிய பணமெல்லாம் இவன் பொண்டாட்டி கை காது கழுத்து னு மாட்டிகிட்டு அலையுமே

  • Darmavan - Chennai,இந்தியா

    இவனுடைய வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

  • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

    சந்தனமும், குங்குமமும் தீர்க்கமான வெச்சுக்கிட்டு இம்மாம்பெரிய கேடியா இருந்திருக்கானே ?

  • ஆப்பு -

    இந்தியன் படம் பாத்த போது நம்பல....இப்போ நம்புறேன்.

  • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

    2006 வழக்கில் நீதி மன்றமும் லஞ்ச ஒழிப்பு துறையும் துரிதமாக செயல்பட்டு தண்டனை பெற்று கொடுத்திருந்தால் அவன் திருடுவானா?? போக்குவரத்துக்கு துரை (விஜய பாஸ்கர்) எதற்கு???? லஞ்சம் வாங்குவதற்கா??

  • Tamilnesan - Muscat,ஓமன்

    என்ன .......ஒரு மாதம் தற்காலிக பணி நீக்கம்..........பிறகு பணி மாற்றம்.......வேறு இடத்தில பல கோடிகள் குவிப்பு...எதிர்காலத்தில் மாநில அமைச்சர்...........வாழ்க ஜனநாயக நாடு..........

  • nabikal naayakam - தூத்துக்குடி,இந்தியா

    இங்கே ஒரு கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன். மிகப்பெரும்பாலும், சுமார் 99சதம் வாரிசு வேலையில் வருபவர்கள் ஊழல் செய்பவர்களாகவே இருக்கிறார்கள். எனவே அரசு இந்த வாரிசு வேலை சிஸ்டத்தையே ஒழித்தால் நல்லது.

  • pattikkaattaan - Muscat,ஓமன்

    தேர்தல் வரும்போது , நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்போம் ..விலைவாசியை குறைப்போம் ... என்று பல வாக்குறுதிகளை அள்ளிவிட்டு ஆட்சிக்கு வருகிறார்கள் ... மக்களும் ஆஹா இனி நமக்கு நல்ல காலம் என்று நினைக்கிறார்கள் ... ஆனால் உண்மையில் நடப்பதோ , முன்பிருந்த ஆட்சிகளைவிட மோசமான நிலையில்தான் ஆட்சி நடக்கிறது ... என்ற மாற்றமும் நடப்பதில்லை ... மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது ... மக்களும் முனகிக்கொண்டே அதற்க்கு பழகிவிடுகிறார்கள் ... இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்தியாவில் லஞ்சத்தை ஒழிக்க முடியாது ... அதனால்தான் தேர்தல் வரும்போது கிடைத்தது லாபம் என்று மக்களே லஞ்சம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள் ... இனி நாட்டை மாற்ற முடியாது ... கலிகாலம் நடக்கிறது

  • mukundan - chennai,இந்தியா

    எந்த R.T.O யா கோடில புரளாம இருக்கான்? இது ஏதோ பெரிய செய்தி மாதிரி போட்டுக்கிட்டு.... முடிஞ்சா எல்லாத்தையும் போய் .....

  • Sekar KR - Chennai,இந்தியா

    நிரூபிக்கப்பட்டால் சிறை, வெளியில் வந்து சம்பாதித்ததை வைத்து வசதியான வாழ்க்கை. முதலில் கணக்கில் வராத பணத்தை அரசு எடுக்கவேண்டும். பிறகு சிறை,

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    பாவம் ஒருவரை பிடித்து என்ன பயன் ... ஒருலட்சத்திற்கு மேல் இதைவிட பெரும் ஊழல்வாதிகள் வெளியிலே சிறப்புடன் வாழ்கிறார்கள் அதையெல்லாம் பிடிக்க முடியாது பின்பலம் இல்லாத லட்சங்களில் ஒருவரை பிடித்து தண்டனை வழங்குவதுதான் நம்நாட்டில் நடக்கிறது

  • S.prakash - Palakkarai,இந்தியா

    பல வக்கீல்கள் வரிசை கட்டி நிற்பார்கள். விரைவில் ஜாமீனில் வெளிவந்து இன்னொரு கட்டு கட்டணும்.

  • sams - tirunelveli,இந்தியா

    That is why lot of time i am writing to remove this bureaucratic tem to digital rem like dubai every thing should be on line and final check up in office with every thing under CCTV reccording to issue the license and other. for the corrupt govt employees poor people paying 130% tax in petrol.and 18% GST .the people come out and beat with chappal as told by ONE UP minister. the govt employees getting lakhs if salary from taxpayers money and doing corruption..this was initiated by kattumaram M..K who made this govt employees as king in each area for corruption.

  • Prakash - tamilnadu,இந்தியா

    இன்று லஞ்சத்தின் பிறப்பிடம் RTo ஆபீஸ் தான். லஞ்சத்தை ஒழிக்க மிகசிறந்த ஒரே வழி.. அனைத்து அரசு அலுவலகத்திலும் உள்ள வயது ஆனவர்களை வேளையில் இருந்து நீக்கி விட்டு இளைஞர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்...... அப்பொழுது தான் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்க முடியும்....

  • கைப்புள்ள - nj,இந்தியா

    இதனாலதான் பணத்தை பூரா பேங்க்ல போட சொல்லுறாங்க, கணக்கு காட்ட சொல்லுறாங்க, பணப்பரிவர்த்தனை பூரா காசோலை மூல பண்ண சொல்லுறாங்க. இப்படி எல்லாம் பண்ணினா சம்பாரிக்கிற ஒவ்வொரு காசுக்கும், வெச்சு இருக்கிற ஒவ்வொரு சொத்துக்கும் கணக்கு காட்டணும். இல்லேனா புடிச்சு ஜெயில்ல போடலாம். அதனாலதான் பயங்கரமா எதிர்க்கிறாங்க.

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    அத்தனை ஆர்டிஓ,பத்திரவு ,காவலர்,கல்வி, வருவாய்,மருத்துவம் துறை களில் பணிபுரியும் அலுவலர்கள், அதிகாரிகள் ,அமைச்சர் கள் சோதனை இட்டு முறை கேடாக சம்பாதித்த சொத்து களை பறிமுதல் செய்தால் தமிழ்நாடு இன்னும்10ஆண்டு களுக்கு பட்ஜெட் போட வேண்டாம்

  • Pats - Coimbatore,இந்தியா

    அண்ணன் ஆர்.டி.ஓ. இன்ஸ்பெக்டர், தம்பிகள் இருசக்கர வாகன டீலர்கள், தங்கை டிரைவிங் ஸ்கூல் ஓனர் - வெளங்கிடும்.

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    மன்னார்குடி என்றாலே மண்ணையும் காசாக்கும் திறமை படைத்தவர்கள்..

  • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

    காசையும் நோட்டையும் நேரடியாக சாப்பிடமுடியாது என்று தெரியவில்லையே... கேடுகெட்ட ஜென்மங்கள்..

  • Meenu - Chennai,இந்தியா

    நம்ம நாட்டுல நிறைய பேர் கடந்த பத்து வருடத்துக்கு முன் இல்லாத அளவுக்கு பெரிய பெரிய சொகுசு கார் வாங்கி வைத்துள்ளனர். எப்படி திடிர்னு என்று பார்த்தால் இது மாதிரி லஞ்சம் ஊழல் செய்த பணத்தில் தான் இன்று நிறைய பேர் சர்வசாதாரணமா கார் வச்சிருக்காங்க... பிளாட் என்ன விலை வித்தாலும் வாங்கி வைத்திருக்காங்க.... நேர்மையா சம்பாதிச்ச காலம் போய் குறுக்கு வழியில் சம்பாதிப்பதை தான் இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்துள்ளனர். இப்படி வழியை காண்பித்து கொடுத்ததே அரசியல்வாதிகள் தான். இப்படியே சென்றால் நாடு மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

  • ravisankar K - chennai,இந்தியா

    இவ்வளவு காசு இருப்பதால் , அடுத்த எலெக்ஷனில் நின்று மந்திரி ஆகி சொத்தை பாதுகாத்து கொள்ளலாம் . எலெக்ஷன் நேரத்தில் ஓசி பிரியாணி போட்டால் மட்டும் போதும் . மக்களே லஞ்சம் வாங்கும் போது போலீஸும் , கோர்ட்டையும் குறை சொல்லி என்ன பயன் ??

  • sathis_kk - Singapore,சிங்கப்பூர்

    2006 ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது ... இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை தீர்ப்பும் இல்லை. 13 வருடங்கள் நீதி தூங்குகிறது... இப்பொழுது கூட ஒன்றும் நடந்து விடப்போவதில்லை ... இந்த வழக்கும் ஒரு 50 வருடம் இழுத்து, இந்த நல்ல அதிகாரிக்கு நல்லதொரு தீர்ப்பை இந்த நீதி மன்றம் வழங்கும், என்ன .... அந்த தீர்ப்பை தெரிந்து கொள்ள இந்த நல்ல அதிகாரி இருக்கமாட்டார் நாமும் இருக்கமாட்டோம். நம் வருங்கால சந்ததிக்கு இது என்ன வழக்கு என்றே தெரிந்திருக்காது....

  • Gopalakrishnan - Kuzhumani,இந்தியா

    இந்த RTO ஒருவன் தான் திருடன் போல செய்தி எழுதுவது சரியல்ல .... குடுத்த காச எப்படி கலெக்ட் பண்றது ...திராவிட பாரம்பரியம் ...திராவிட ஆட்சியில் நாம் கண்ட கைமேல் பலன் ...

  • Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ

    எல்லா ஊழல்களும் மன்னார்குடி கும்பலுடன் சேருகிறது. வெரி இன்டெரஸ்டிங்

  • jagan - Chennai,இந்தியா

    கோடிகளை குவித்த கேடி

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    இது உலகறிந்த உண்மைதானே... நடவடிக்கை எடுக்க ஒருவனுக்கும் நேரம் இல்லை... இதைவிட சார்பதிவாளர்கள் பல மடங்கு பணம் பார்ப்பவர்கள்...

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    இன்னொரு தமிழன்.தலைவன் காட்டிய பாதையை தொடர்ந்தான், தவறா?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    இது ஒரே ஒரு சின்ன எலிப்புழுக்கையூரில் இது ஒரே ஒரு பெருச்சாளி அடிச்சது. டைனசோர் ஆர்.டி.ஓ க்கள் அடிச்சதும், எங்களுக்கு அப்பன் துறை மந்திரி , ஐ.ஏ.எஸ்ஸுங்க அடிச்சது எத்தினி லட்சம் கோடி??

  • கைப்புள்ள - nj,இந்தியா

    அட போங்கய்யா இதெல்லாம் சும்மா டும்மு. இப்போ புடிச்சு மட்டும் என்னா பண்ண போறீங்க? இவனோட சேர்த்து லச்சம் பேரு இருக்கானுங்க இப்புடி. இவனுகளை எல்லாம் புடிச்சு நீங்க என்னா பண்ண போறீங்க? அவனுக கூட கூட்டணி வெப்பீங்க. மறுபடியும் காசு கிடைக்கிறதுல ஆளுக்கு பிப்டி பிப்டி ன்னு பேரம் பேசி முடிச்சிட்டு வெளில விட்டுடுவீங்க. இதுக்கு வேண்டிதான் மோடி கணக்கு கேக்குறாரு. பேங்க்ல போடுற ஒவ்வொரு காசுக்கும் என்ன கணக்கு, எப்புடி வந்திச்சு, யாரு குடுத்தா, சம்பளமா வந்திச்சா இல்ல கிம்பளமா வாங்கினியா. அதே மாறி பண்ணுகிற ஒவ்வொரு செலவும் வங்கி மூலமாக காசோலையாகவே பண்ணு, அப்போதான் கணக்கு வரும். காசா கொடுத்தா இப்புடி ஒவ்வொருத்தனும் வாங்கிட்டு போயி, பொண்டாட்டி, ரெண்டாவது பொண்டாட்டி, அம்மா, பையன் இவங்க பேர்ல சொத்தா வாங்கி போட்டு குவிச்சு வெச்சுட்டு நல்லா செம ஜாலியா இருக்கீங்க. மத்தவன் எப்பவும் போல கஷ்டப்பட்டுக்கிட்டே இருக்கான். இப்புடி பண்ணி பண்ணிதான் நாட்டுக்குள்ள காசு, கருப்பு பணம் பெருகியே போயிடிச்சு. ஏழை எப்பவும் ஏழையாகவே இருக்கான், பணக்காரன் எப்பவுமே பணக்காரனாகவே இருக்கான். மற்றபடிக்கு இந்த திருட்டு பசங்கள் சொல்லுவது போல ஒரு காப்பரேட் கம்பெனினால என்பதெல்லாம் சுத்த பொய். இது போன்ற ஆட்களால் தான் நம்ம நாடு சின்னா பின்னம் ஆகிட்டு இருக்கு. அதனால தான் இது போன்ற ஆட்களுக்கு சரியாக ஆப்பு வைக்கும் மோடி பல பேருக்கு புடிக்கிது சில பேருக்கு புடிக்கிறது இல்லை.

  • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

    ஆர்.டி.ஓ குவித்த கோடிக்கணக்கான பணமும் திரும்பி வந்துவிட்டதுன்னு ரிசர்வ் பேங்க் சொல்லிருச்சே ? மோடியின் பண மதிப்பிழப்பு மிகப்பெரிய தோல்வின்னு இந்த ஆர் டி ஓ நிரூபிச்சுட்டார் இதுக்கே மோடி உடனடியா ராஜினாமா செய்யணும்

  • அன்பு - தஞ்சை,இந்தியா

    பாபுவும் நமது முதல்வர் பழனி மாதிரி புத்திசாலித்தனமாக நிலைமையை உபயோகப்படுத்தி, காற்றுள்ளபோதே தூற்றி கொண்டுள்ளார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement