Advertisement

ரயில்வே மேம்பாலப் பணியை ஆறு மாதத்தில் முடிக்க திட்டம்

கணியூர்:கருமத்தம்பட்டி அருகே, கணியூர் - மாதப்பூர் ரயில்வே 'கேட்' பகுதியில், மேம்பாலம் அமைக்க நில அளவீடு முடிந்து, கற்கள் நடப்பட்டுள்ளன. ஆறே மாதத்தில், பாலம் கட்டப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
கரவளி மாதப்பூர் - கணியூர் வழியில், ரயில்வே கடவு எண்: 141 உள்ளது. இவ்வழியாக, தினமும், 48 முறை ரயில்கள் கடந்து செல்கின்றன. அத்தனை முறையும் ரயில்வே கேட் மூடப்படுவதால், கணியூரில் இருந்து கரவளி மாதப்பூர் செல்லும் வாகனங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த ரயில்வே கேட்டில், மேம்பாலம் அமைக்க தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில், மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்பார்வையில், நெடுஞ்சாலைத்துறை அளவையர்கள், ரயில்வே கேட் இருபுறமும் நில அளவை செய்தனர். தற்போது, ரயில்வே கேட்டில் இருந்து, 200 மீட்டர் துாரம் வரை அளவை கற்கள் நடப்பட்டுள்ளன.
மேம்பாலப் பணிக்காக இதுவரை நிலம் கையகப்படுத்தவில்லை. திடீரென நிலம் அளவீடு செய்து,
கற்கள் நடப்பட்டு வருவதால், அப்பகுதி தென்னந்தோப்பு உரிமையாளர்கள், வீடுகள் வைத்திருப்போர், தனியார் கம்பெனி நிர்வாகிகள் பலரும் கலக்கம் அடைந்துள்ளனர். முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பி உள்ளனர். சூலுார் தாசில்தார் ஜெகதீஷனிடம் கேட்டபோது, ''நில அளவை செய்யப்பட்டு அளவை கற்கள் நடப்பட்டுள்ளன. நிலம் கையகப்படுத்த வேண்டிய பயனாளிகளிடம், மாவட்ட வருவாய் அலுவலர் பேசியுள்ளார். சுமூகமாக முடிந்துள்ளது. ஆறே மாதத்தில் பாலம் பணி முடிவடையும்,'' என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement