Advertisement

பான்பராக், குட்கா விற்பனை அமோகம்

கருமத்தம்பட்டி:சோமனுார் மற்றும் கருமத்தம்பட்டி பகுதிகளில், பான்பராக், குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை அமோகமாக நடக்கிறது.

கருமத்தப்பட்டி, சோமனுாரில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, மற்றும் பான் மசாலா பொருட்கள் சர்வ சாதாரணமாக விற்கப்படுகின்றன. புகையிலை பொருட்களும் இங்குள்ள பெட்டிக்கடைகளில் சாதாரணமாக புழங்குகின்றன.
கூலி வேலை செய்வோர், கட்டட தொழிலாளர்கள் புகையிலை பொருட்களுக்கு அடிமையாக்கப்பட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் பலரும் போதை பொருட்களை இரட்டிப்பு விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.
சோமனுாரில் குட்கா குடோன் உணவு பாதுகாப்பு துறையினரால் சீலிடப்பட்டது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா மற்றும் பான்பராக் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. எனினும், இதன் விற்பனையை இன்று வரை கட்டுப்படுத்த முடியவில்லை.
புகையிலை பொருட்கள் எங்கெங்கு விற்கப்படுகிறது என அறிந்தும் கூட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இனிமேலாவது, போதை பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement