Advertisement

திருப்பரங்குன்றத்தில் பணமழை : மார்க்சிஸ்ட் எச்சரிக்கை

மதுரை: ''திருப்பரங்குன்றம், திருவாரூரில் மக்களுக்கு பணமழை கொட்டும்,'' என மதுரையில் மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சொல்வோரை கைது செய்து மிரட்டுகின்றனர். அரசின் ஊழலை கண்டித்து செப்.,15 முதல் பிரசாரம் நடத்தப்படும். இங்கு ஊழல் செய்யாத அமைச்சர்களே இல்லை. தேவையற்ற திட்டத்தை லாபநோக்குடன் செயல்படுத்துகின்றனர். சேதமாகும் அணைகளை புதுப்பிக்க அரசு முயற்சிக்கவில்லை.
மத்திய, மாநில அரசு நிர்ணயிக்கும் 52 சதவீத வரியால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. முக்கொம்பு அணை சேதம் குறித்து முதல்வர் பழனி சாமி, காய்ச்சல் வருவது போலத்தான் என்கிறார். இது போன்று முதல்வர், அமைச்சர்கள் 'நகைச்சுவை நடிகர்கள் போல்' பேசுவது வேதனை தருகிறது. குட்கா வழக்கில் யார் மீதும் சி.பி.ஐ., நடவடிக்கை எடுக்கவில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு பணம் கொடுத்து அவர்களை வைத்து ஆட்சியில் நீடிக்கத்தான் முதல்வர் பழனிசாமி விரும்புகிறார். இடைதேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல்களில் மக்களை சந்திக்க முடியாது. பணத்தை வைத்தே சந்திக்க உள்ளனர். வரும் தேர்தலில் இக்கட்சி
'டெபாசிட்' கூட பெறாது. திருப்பரங்குன்றம், திருவாரூரில் லாட்டரி சீட்டு அடித்தது போல் மக்களுக்கு பணமழை
கொட்டும் என்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Idithangi - SIngapore,சிங்கப்பூர்

    எவ்வளவு குலுக்கினால் இப்போது எல்லாம் தகர டப்பா நிறைய மாட்டேங்குதேங்குற கவலையில் சொல்லி விட்டார்.

  • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

    தேவை இல்லாத, நாட்டுக்கு ஒவ்வாத கட்சி இந்த கம்யூனிஸ்டு.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement