Advertisement

'பாரதியின் படைப்புகள் ஆன்ம விடுதலை அளிக்கிறது'

கோவை:பாரதி பாசறை சார்பில், பாரதியார் நினைவு நாள் நிகழ்ச்சி அவிநாசி ரோடு இந்திய தொழில் வர்த்தக அரங்கில் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:
நான் திரும்பத் திரும்ப, பாரதியின் படைப்புகளை படித்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு முறை படிக்கும் போதும், அவரது கவிதைகள் வெவ்வேறு அர்த்தங்களை தருகின்றன. மனித வாழ்க்கையின் எல்லா சூழலுக்கும், எல்லா காலத்துக்கும், பாரதியின் படைப்புகள் பொருந்துகின்றன. பாரதி மகாகவியாக திகழ்வதற்கு, இதுதான் காரணம்.
பாரதி, ஞான மரபின் தொடர்ச்சியாக வந்தவர். அவரது பாடல்கள், நமக்கு ஆன்ம விடுதலை தருகின்றன. அரசியல் விடுதலை, சமூக விடுதலை, ஜாதி விடுதலை, ஆன்ம விடுதலை என, மானுடத்தை நோக்கி சிந்தித்த ஒரே தமிழ் கவிஞனாக, பாரதி மட்டுமே காட்சி தருகிறார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பாரதி பாசறை தலைவர் மோகன் சங்கர், சிறு துளி உயர்மட்டக்குழு உறுப்பினர் மணியன், பாரதி பாசறை நிர்வாகி ஜான்பீட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement