Advertisement

எத்தனால் விலை உயர்வு : கேபினட் ஒப்புதல்

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், பெட்ரோல் இறக்குமதியை குறைக்கும் நோக்கில், பெட் ரோலுடன் கலக்கப்படும் எத்தனாலின் விலையை, 25 சதவீதம் உயர்த்த, ஒப்புதல் அளிக்கப்பட்டது.பெட்ரோல் தயாரிப்புக்கு, மிக முக்கிய மூலக்கூறாக, எத்தனால் பயன்படுத்தப்படுகிறது. கரும்பு சாறில் இருந்து பிரித்து எடுக்கப்படும் எத்தனாலின் விலை, லிட்டர், 47.13 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது.இந்த விலையை, 25 சதவீதம் உயர்த்தி, 59.13 ஆக விற்பனை செய்ய, கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என, மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர், தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்திய ரயில்வேயில், 13 ஆயிரத்து, 675 கி.மீ., துார ரயில் பாதை, இன்னும், மின்சார ரயில் தடமாக மாற்றப்படாமல் உள்ளது. அவற்றை, 12 ஆயிரத்து, 134 கோடி ரூபாய் செலவில், மின்சார
வழித்தடமாக மாற்ற, கேபினட் கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்தப் பணி, 2021 - 22ல் முடிவடையும் என, தெரிவிக்கப்பட்டது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement