Advertisement

அகில இந்திய கூடைப்பந்து  அரையிறுதிக்கு நான்கு அணிகள்

கோவை:54ம் ஆண்டு பி.எஸ்.ஜி., கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி., டெக் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கின்றன.
இதில், டில்லி இந்தியன் ரயில்வே அணி, டில்லி இந்திய விமான படை அணி, டில்லி இந்திய ராணுவம் அணி, சென்னை இந்தியன் வங்கி அணி, பெங்களூரு விஜயா வங்கி அணி, கேரளா சுங்க வரித்துறை அணி, சென்னை வருமான வரித்துறை அணி, சென்னை ஐசிஎப் அணி உள்ளிட்ட, 8 அணிகள் கலந்து கொண்டன.
'அ' பிரிவில் அதிக புள்ளிகள் பெற்ற விஜயா வங்கி, இந்தியன் வங்கி அணிகளும், 'ஆ' பிரிவில், அதிக புள்ளிகள் பெற்ற இந்தியன் ரயில்வே, வருமான வரித்துறை அணிகளும், அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. நேற்று முன் தினம் நடந்த முதல் போட்டியில், இந்தியன் வங்கி அணி, 78- 55 என்ற புள்ளி கணக்கில், ஐ.சி.எப்., அணியையும்; 2வது போட்டியில், விஜயா வங்கி அணி, 61- 52 என்ற புள்ளி கணக்கில், இந்திய ராணுவ அணியையும் வென்றது.
3வது போட்டியில், இந்திய விமானப்படை அணி, 89-72 என்ற புள்ளி கணக்கில், கஸ்டம்ஸ் அணியையும்; 4வது போட்டியில், சென்னை வருமான வரித்துறை அணி, 70- 65 என்ற புள்ளி கணக்கில், இந்தியன் ரயில்வே அணியை வென்றது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement