Advertisement

சமரசம் குறித்து பேசினேன்: மல்லையா சிறிதளவும் உண்மையில்லை: ஜெட்லி

புதுடில்லி: ''இந்தியாவை விட்டு புறப்படுவதற்கு முன், வங்கிக் கடன் பிரச்னையில் சமரசம் செய்வது குறித்து, நிதி அமைச்சரை சந்தித்து பேசினேன்,'' என, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளான். ஆனால், ''இது, முழு பொய், இதில் சிறிதளவும் உண்மையில்லை,'' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

வங்கிகள் வழக்கு : வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, பல்வேறு வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து, 2016 மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கியுள்ளான்.அவனை, நாடு கடத்துவதற்காக, லண்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.அப்போது விசாரணைக்கு ஆஜராக வந்த, மல்லையா கூறியதாவது:
வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவதில் சமரசம் செய்து கொள்வது குறித்து, கர்நாடகா நீதிமன்றத்தில் விரிவான திட்டத்தை சமர்ப்பித்துள்ளேன்.
ஜெனிவாவில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இந்தியாவில் இருந்து நான் புறப்பட்டேன்.
அவ்வாறு புறப்படுவதற்கு முன், நிதி அமைச்சரை சந்தித்து, வங்கிக் கடன் பிரச்னையில்
சமரசம் செய்து கொள்வதாகக் கூறினேன்.
ஆனால், இந்த சமரசத்துக்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், நான் நாடு திரும்பவில்லை.
இவ்வாறு அவன்
கூறினான்.
முழு பொய்
இந்த நிலையில்,
மல்லையா கூறியதை மறுத்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த
தலைவருமான, அருண் ஜெட்லி கூறியதாவது:
விஜய் மல்லையா கூறிய கருத்து குறித்து
அறிந்தேன். சமரசம் செய்து
கொள்வதற்கு தயாராக இருப்பதாக, என்னை
சந்தித்து பேசியதாக அவர்
கூறியுள்ளார். இது,
முழு பொய்; சிறிதளவும் உண்மை இல்லை.
கடந்த, 2014ல் இருந்து, என்னை சந்திப்பதற்கு, மல்லையாவுக்கு நான் நேரம் ஒதுக்கியது
கிடையாது.
அதே நேரத்தில்,
ராஜ்யசபா, எம்.பி.,யாக இருந்த அவர், ஒருமுறை, சபையில் இருந்து நான்
என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும்போது, தன் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, ராஜ்யசபாவின் வராண்டாவில் என்னிடம் பேச முயன்றார்.
'சமரசம் செய்து கொள்கிறேன்' என, அவர் கூறினார். இவ்வாறு அவர் பல பொய் வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்துள்ளது எனக்கு தெரியும்.
அதனால், இது தொடர்பாக, என்னிடம் பேசிப் பயனில்லை என்றும், கடன் வழங்கிய வங்கிகளுடன் சமரசம் செய்யும்படியும் கூறினேன்.
இவ்வாறு ஜெட்லி
கூறியுள்ளார்.
இதற்கிடையே, மல்லை
யாவை நாடு கடத்தும் வழக்கில், டிச., ௧௦ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, பிரிட்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement