Advertisement

கிரிக்கெட்: வசந்தம் சி.சி.,அணி வெற்றி

கோவை:மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டியில், வசந்தம் கிரிக்கெட் கிளப் அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 2018-19ம் ஆண்டுக்கான, 'யுனிவர்சல் ஹீட் எக்ஸ்சேன்சர்ஸ்' இரண்டாம் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, 'சிட்டி ஸ்போர்ட்ஸ்' டிராபிக்கான ஐந்தாம் டிவிஷன் போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'சி' மைதானத்திலும், சி.ஐ.டி., கல்லுாரியிலும் நடந்தன.
பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரியில் நடந்த, ஐந்தாம் டிவிஷன் போட்டியில், வசந்தம் கிரிக்கெட் கிளப் அணிகள், அக் ஷயா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த வசந்தம் சி.சி., அணி, 50 ஓவரில், ஏழு விக்கெட் இழப்புக்கு, 245 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய அக் ஷயா கல்லுாரி அணி, 44.2 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 212 ரன் எடுத்தது. வசந்தம் சி.சி., அணி, 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சி.ஐ.டி., கல்லுாரியில் நடந்த, இரண்டாம் டிவிஷன் போட்டியில், ஆறுமுகம் லெவன் பேட்ரியஸ் சி.சி., அணி, ஆறுமுகம் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.
முதலில் 'பேட்' செய்த ஆறுமுகம் லெவன் பேட்ரியஸ் அணி, 45.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 178 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆறுமுகம் சி.சி., அணி, 24 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 97 ரன் எடுத்தது. ஆறுமுகம் லெவன் பேட்ரியஸ் அணி, 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement