Advertisement

கிரிக்கெட்; மாணவர்கள் அபாரம்

கோவை:சென்னை, அண்ணா பல்கலை சார்பில், 2018- 19ம் ஆண்டுக்கான, கோவை- 10வது மண்டல இன்ஜி., மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மைதானத்தில் நடந்தது.

மூன்றாமிடத்துக்கான போட்டியில், ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, இந்துஸ்தான் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின. முதலில் 'பேட்' செய்த ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி அணி, 25 ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 160 ரன் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய இந்துஸ்தான் அணி, 22.3 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 84 ரன் மட்டுமே எடுத்தது. ஸ்ரீகிருஷ்ணா இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 76 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், மூன்றாமிடமே கிடைத்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement