Advertisement

மது கடத்தல் : டிரைவர் கைது

மயிலாடுதுறை: காரைக்காலில் இருந்து தமிழகத்திற்கு, காரில் மது பாட்டில்கள் கடத்தி வந்த டிரைவர் கைது செய்யப்பட்டான். புதுச்சேரி, காரைக்காலில் இருந்து, நாகை மாவட்டம், சீர்காழி பகுதிக்கு, 'ஹூண்டாய் எலெக்ட்ரா' காரில், மது பாட்டில்கள் கடத்தி வருவதாக, தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார், சூரக்காடு பாலத்தில் வந்த காரை நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர்.காரில், 60 அட்டை பெட்டிகளில், 2,880 புதுச்சேரி மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. மது பாட்டில்களுடன், காரை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த டிரைவர் சந்தோஷ், 28, என்பவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மது பாட்டில்கள் மதிப்பு, 6 லட்சம் ரூபாய் ஆகும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement