Advertisement

பல்கலை கபடி: கோபி பி.கே.ஆர்., அணி சாம்பியன்

கோவை:கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கான கபடி போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோபி பி.கே.ஆர்., அணி, சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
கோவை, பாரதியார் பல்கலையின் கீழ் உள்ள கல்லுாரி மாணவிகளுக்கான கபடி போட்டிகள், ஸ்ரீநாராயணகுரு கல்லுாரியில் நடந்தன. நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்த போட்டியில், 25 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
நேற்று நடந்த லீக் முதல் போட்டியில், திருப்பூர் ஏ.வி.பி., அணி, 45- 31 என்ற புள்ளி கணக்கில், பாரதியார் பல்கலை அணியை வென்றது.
2வது போட்டியில், கோபி, பி.கே.ஆர்., அணி, இந்துஸ்தான் கல்லுாரி அணிகள் மோதின. ஆட்டம், 30-30 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.
3வது போட்டியில், ஏ.வி.பி., அணி, 33- 28 என்ற புள்ளி கணக்கில், இந்துஸ்தான் கல்லுாரி அணியையும்; 4வது போட்டியில், பி.கே.ஆர்., அணி, 73- 22 என்ற புள்ளி கணக்கில், பாரதியார் பல்கலை அணியையும் வென்றது.
5வது போட்டியில், இந்துஸ்தான் கல்லுாரி அணி, 27-19 என்ற புள்ளி கணக்கில், பாரதியார் பல்கலை அணியையும்; 6வது போட்டியில், பி.கே.ஆர்., 34-30 என்ற புள்ளி கணக்கில், ஏ.பி.பி., கல்லுாரி அணியை வென்றது.
லீக் போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற, கோபி பி.கே.ஆர்., அணி முதலிடத்தையும், திருப்பூர் ஏ.வி.பி., அணி இரண்டாமிடத்தையும், இந்துஸ்தான் கல்லுாரி அணி மூன்றாமிடத்தையும் பிடித்தது.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு, ஸ்ரீநாராயணகுரு கல்லுாரியின் சேர்மன் கிருஷ்ணன், முதல்வர் இளங்கோவன் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். உடற்கல்வி இயக்குனர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement