Advertisement

மசினகுடியில் மின்வேலி அகற்றும் பணி துவக்கம்

கூடலுார்: மசினகுடி, பொக்காபுரம் பகுதிகளில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, 'சீல்' வைக்கப்பட்ட
விடுதிகளில் உள்ள வேலிகளை அகற்றும் பணி துவங்கியது. நீலகிரி மாவட்டம், முதுமலை மசினகுடி, பொக்காபுரம், வாழைதோட்டம் ஆகிய பகுதிகளில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட, 38 தனியார் விடுதிகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி, கடந்த மாதம், மாவட்ட நிர்வாகம், 'சீல்' வைத்தது. இந்நிலையில், விடுதிகளை சுற்றியுள்ள கம்பிவேலி மற்றும் சோலார் மின்வேலிகளை, 48 மணி நேரத்தில் அகற்ற, வனத்துறையினர் ஏற்கனவே, 'நோட்டீஸ்' வழங்கினர். இந்நிலையில், நேற்று வாழை தோட்டம் பகுதிகளில், 10 விடுதிகளில் உள்ள மின்வேலிகளை அகற்றும் பணி நடந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement