Advertisement

செக்கானூர் காவிரி கதவணையில் முழு அளவில் தண்ணீர் தேக்கம்

மேட்டூர்: செக்கானுார் கதவணையில், உடைந்த ஷட்டர்கள் சீரமைக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு பின், முழுமையாக தண்ணீர் தேக்கி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த, செக்கானுாரில், காவிரியின் குறுக்கே, கதவணை மின் நிலையம், 1988ல் கட்டப்பட்டது. இங்கு, 2 யூனிட்களில், 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படுகிறது.இதற்காக, காவிரியின் குறுக்கே, 18 மதகுகளில் தலா, 9 மீட்டர் உயரம்; 6 மீட்டர் அகலம்; 50 டன் எடை கொண்ட, 18 ஷட்டர்கள் பொருத்தி, 0.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.கடந்த, 2015ம் ஆண்டு, மூன்று ஷட்டர்கள் சேதமாகின. புது ஷட்டர் பொருத்துதல், பலவீனமான ஷட்டர்களை சீரமைக்கும் பணிகள் நடந்தன.தேங்கி நிற்கும் நீரின் அழுத்தத்தால், ஷட்டர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, மூன்று ஆண்டுகளாக, கதவணையில், 0.40 டி.எம்.சி., தண்ணீர் மட்டும் தேக்கி, குறைவான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், மூன்று
ஆண்டுகளுக்கு பின், தற்போது, செக்கானுார் கதவணையில், 9 மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டு, முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement