Advertisement

வாலிபால்: எத்திராஜ் சாம்பியன்

சென்னை:கல்லுாரி வாலிபால் போட்டியில், எத்திராஜ் மகளிர் கல்லுாரி, சாம்பியன் பட்டத்தை வென்றது.


சென்னை பல்கலை உடற்கல்வி துறை சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள், எத்திராஜ் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. இதில், சென்னை பல்கலையில் உள்ளடங்கியுள்ள, 16 கல்லுாரி அணிகள் பங்கேற்றன.நேற்று முன்தினம் நடந்த காலிறுதி போட்டியில், எத்திராஜ் அணி, எஸ்.எஸ்.எஸ்., ஜெயின் அணியை தோற்கடித்தது.


அரையிறுதியில், டபள்யூ.சி.சி.,யை, எத்திராஜ் அணி வீழ்த்தியது. இறுதிப் போட்டியில், சோக்கா கேகடா அணியை தோற்கடித்து, எத்திராஜ் அணி வெற்றி பெற்றது.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement