Advertisement

எறிபந்து போட்டி ஜெபாஸ் முதலிடம்

சென்னை:சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா எறிபந்து போட்டியில், ஜெபாஸ் கல்லுாரி
முதலிடம் பிடித்தது.சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா சார்பில், எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.


இதில், எறிபந்து, சதுரங்கம், மேஜைப்பந்து போட்டிகள், நேற்று நிறைவடைந்தன. எறிபந்து போட்டியில், ஜெபாஸ் கல்லுாரி முதலிடமும், எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி இரண்டாவது இடத்தையும் பிடித்தன.சதுரங்க போட்டியில், எஸ்.ஆர்.எம்., மாணவர் பிருத்விகுமார் முதலிடமும், எச்.ஐ.டி.எஸ்., கல்லுாரி மாணவர், எம்.எஸ். அருண் இரண்டாவதும், செயின்ட் ஜோசப்
மாணவர், எஸ்.ஆகாஷ் மூன்றாவது இடங்களையும் பிடித்தனர்.மேஜைப்பந்தில், ஆண், பெண் இரு பிரிவிலும், எஸ்.ஆர்.எம்., பல்கலை முதலிடம் பிடித்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement