Advertisement

டிவிஷன், 'பீச்' வாலிபால் செயின்ட் பீட்டர்ஸ் வெற்றி

சென்னை:சென்னை டிவிஷன், 'பீச்' வாலிபால் போட்டியில், செயின்ட் பீட்டர்ஸ்
மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது.


பள்ளிக்கல்வித்துறை சார்பில், சென்னை டிவிஷன் அளவிலான, 'பீச்' வாலிபால் போட்டி, அடையாறு, குமாரராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பில் நடந்தது. பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில், 24 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், 14 வயதிற்கு உட்பட்ட, மாணவர் பிரிவில், செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, நித்தீஷ் மற்றும் பிரதீஷ் வெற்றி பெற்றனர்.


மாணவியர் பிரிவில், டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி, அபிநயா மற்றும் வர்ஷா ஸ்ரீ, 17 வயதிற்கு உட்பட்ட
மாணவரில், அதே பள்ளியைச் சேர்ந்த ஹரீஷ், கணேஷ் வென்றனர்.மாணவியர் பிரிவில், பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பவித்ரா மற்றும் கிருத்திகா வெற்றி பெற்றனர்.


மாணவர்களுக்கான, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில், செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சந்திரசேகர், காமேஷ், மாணவியரில், குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த, ஓவியா, யமுனா முதலிடம் பிடித்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement