Advertisement

சந்தித்தேன்: மல்லையா ; முழு பொய்: ஜெட்லி

புதுடில்லி : "இந்தியாவை விட்டு புறப்படுவதற்கு முன் வங்கிக் கடன் பிரச்னையில் சமரசம் செய்வது குறித்து, நிதி அமைச்சரை சந்தித்து பேசினேன்," என பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.


ஆனால் "இது, முழு பொய் இதில் சிறிதளவும் உண்மையில்லை. இந்தப் பிரச்னை குறித்து நான் அவரை சந்திக்கவேயில்லை," என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.


வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாக பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது பல்வேறு வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. அதைத் தொடர்ந்து, 2016 மார்ச் மாதம், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, பிரிட்டன் தலைநகர் லண்டனில் பதுங்கியுள்ளார்.


அவரை நாடு கடத்துவதற்காக, லண்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை, லண்டன் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது விசாரணைக்கு ஆஜராக வந்த மல்லையா கூறியதாவது:


வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவதில் சமரசம் செய்து கொள்வது குறித்து, கர்நாடகா நீதிமன்றத்தில் விரிவான திட்டத்தை சமர்ப்பித்துள்ளேன். அதில் நீதிமன்றம் தகுந்த முடிவை எடுக்கும் என நம்புகிறேன். வங்கிகளை பொறுத்தவரை, அவர்களுக்கு கடன் திருப்பித் தர வேண்டும். அதற்கு தயாராக உள்ளேன்.


ஜெனிவாவில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருந்து நான் புறப்பட்டேன். அவ்வாறு புறப்படுவதற்கு முன் நிதி அமைச்சரை சந்தித்து வங்கி கடன் பிரச்னையில் சமரசம் செய்து கொள்வதாகக் கூறினேன். ஆனால், இந்த சமரசத்துக்கு வங்கிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், நான் நாடு திரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இந்த நிலையில், மல்லையா கூறியதை மறுத்து, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, கூறியதாவது: விஜய் மல்லையா கூறிய கருத்து குறித்து அறிந்தேன். சமரசம் செய்து கொள்வதற்கு தயாராக இருப்பதாக என்னை சந்தித்து
பேசியதாக அவர் கூறியுள்ளார். இது, முழு பொய்; சிறிதளவும் உண்மை இல்லை.


2014ல் இருந்து, என்னை சந்திப்பதற்குமல்லையாவுக்கு நான் நேரம் ஒதுக்கியது கிடையாது. அதே நேரத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த அவர் ஒருமுறை சபையில் இருந்து நான் என்னுடைய அலுவலகத்துக்கு செல்லும்போது தன் பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ராஜ்யசபா வராண்டாவில் என்னிடம் பேச முயன்றார்.


'சமரசம் செய்து கொள்கிறேன்'என, அவர் கூறினார். இவ்வாறு அவர் பல பொய் வாக்குறுதிகளை ஏற்கனவே அளித்துள்ளது எனக்கு தெரியும். அதனால் இது தொடர்பாக, என்னிடம் பேசிப் பயனில்லை. கடன் வழங்கிய வங்கிகளுடன் சமரசம் செய்யும்படி கூறினேன். இவ்வாறு ஜெட்லி கூறியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (44)

 • நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா

  பண்ணுறதையும் பண்ணிட்டு, முகத்தை அப்பாவி போல் வைத்துக்கொண்டு நடிக்கும் நிதியமைச்சருக்கு ஒரு பெரிய ஆஸ்கர் விருதே தரலாம். பாவம் மோடி இவர்களை எல்லாம் வைத்துக்கொண்டு எப்படித்தான் அரசை நடத்துகிறாரோ என்று தெரியவில்லை.

 • Balakrishnan - Bangalore,இந்தியா

  அருண் ஜைட்டலி மல்லையாவிற்கு உதவி செய்வதாயிருந்தால் அது ரகசியமாக செய்யப்பட்டிருக்கும். பாராளுமன்றத்தில் எல்லார் முன்னிலையிலும் சந்திப்பு நடந்திருக்காது. அரசியல்வாதிகளுக்கு இந்த அறிவு கூடவா இருக்காது ? எனவே இது ஒரு சாதாரண சந்திப்பு தான் என்று பொது அறிவு உள்ளவர்கள் எல்லோருக்கும் விளங்கும்

 • Ganapathy - Bangalore,இந்தியா

  ஒண்ணும் சொல்லிறாதீங்க ,அடிச்சுக்கூட கேட்பாக ஒண்ணும் சொல்லிறாதீங்க, ஏதும் சொன்னிகளா ? என்று வடிவேல் ஒரு திரைப்பட காமடி . அந்த நிலைமைதான் இப்போ ஜெட்லீக்கு .

 • தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா

  கடன் கொடுத்தவரிடம் சமாதானம் செய்வதுதான் நியாயம். அதை விடுத்து நிதியமைச்சரை ஏன் சந்திக்கவேண்டும் ஓ அவர்தான் கடன்களை விடாமல் வசூல் செய்ய சொன்னார் எனவே அவர் சொன்னால் கடனை தள்ளுபடி செய்ய முடியும் என நம்பி சந்திக்க முயற்சி செய்தது வீணாகி விட்டது என வருத்தப்பட்டு வந்த செய்தி இது

 • sankaseshan - mumbai,இந்தியா

  யோக்கியன். மல்லையா இத்தனை நாள் எதனால் வாய் திறக்கவில்லை.இந்த யோக்கியனுக்கும் சப்போர்ட் பண்ண பப்பு போன்ற கூமுட்டைகளும் கருத்து போடும். மேதாவிகளும் இருக்கிறார்கள்.வெட்கம்

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   ஓட விட்டது கூமுட்டை அதை சொல்லி கட்டியுள்ளான் ஓடியவன் இதற்கும் பப்புக்கும் என்னடா சம்பந்தம்

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  விஜய் மல்லையா ஓடிப்போவது முன் "நான் ஓடிப்போகபோறேன்.." என்று FM கிட்ட நேரில் போய் சொல்லிட்டா ஓடுவான்?... அப்படியே அவன் அவரை பார்த்தது உண்மையானாலும், பணம் பிரச்சனை ஆகியதை சொல்லி காப்பாற்ற தான் கேட்டு இருப்பான்.. அவரு முடியாது என்றவுடன் ஓடிப்போக திட்டமிட்டு இருப்பான்..

  • Mohamed Ilyas - Karaikal,இந்தியா

   அவனை பிடிக்க வழியில்லை இந்த கூமுட்டைக்கு, அல்லது பாஸ்போர்ட் and ஏர்போர்ட் அடுத்தரிட்டி எல்லாம் காங்கிரேசம் வசம் உள்ளது இல்லை ?

 • mindum vasantham - madurai,இந்தியா

  athu onnum illai varai iindiavai naadu kadaththum valakku innum 5 naatkalil varukirathu matrum innum 15 naalil ivan india sirayil inda nalla peyar modkku vara koodathu endru ippove thundu podukiindranar இவர்கள்

  • தலைவா - chennai,இந்தியா

   காங்., தலைவர் ராகுல்: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் தற்கொலை, பாலியல் பலாத்காரங்கள், ரபேல் ஒப்பந்தம் என, எதற்கும் பதில் அளிக்காமல், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பது, ஆச்சரியமாக உள்ளது. டவுட் தனபாலு: பிரதமர் பேசாதது குறித்து, நீங்க ஆச்சரியப்படுவது தான், எங்களுக்கு ஆச்சரியமா இருக்கு... காங்., ஆட்சியில், நாளொரு பிரச்னை, வாரம் ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தபோது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உடனுக்குடன் பதில் அளித்த மாதிரி, கொதிக்குறீங்களே... தலைவனின் பதில் : பிரதமர் பதவி ஒரு மாதிரி செய்வினை செய்து பேசாமடந்தை ஊமை ஆக்கிவிடும் போல..ராகுல் பிரதமர் ஆனவுடன் புரிந்து கொள்வார் என நம்பலாம்.

 • மணிமாறன் - trichy,இந்தியா

  ஹா..ஹா..நான் சந்திக்கவே இல்லை.. ஆனால் அவர் தான் வராண்டாவில் சந்தித்தார்..ஆட்டம் இப்போதுதான் ஆரம்பம்..தேர்தல் நெருங்கும்போது..இந்த பிரச்சனை பிஜேபியை இன்னும் நெருக்கும்..

  • Darmavan - Chennai,இந்தியா

   எல்லாம் தெளிவாக சொன்ன பிறகு மல்லய்யாவே ஒப்புக்கொண்ட பிறகு இப்படி பேசுவது முட்டாள்தனம்.

  • Karthik - Chennai,இந்தியா

   உங்களுக்கு விவரம் பத்தலை. பேரம் நடந்தாலும் நடக்கலாம்.

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   //உங்களுக்கு விவரம் பத்தலை. பேரம் நடந்தாலும் நடக்கலாம்// எது வேண்டுமானாலும் நடக்கும். இதே அருண் ஜெட்லீ மல்லையா சந்திக்க வந்தது பற்றி இப்போது சொல்வது ஏன்? மல்லையாவை சரியான முறையில் குடைந்தால் பல திரைமறைவு உண்மைகள் வெளிவரும். வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு உத்தரவு போதும்...இந்த திருடனை ஏர்போர்ட்டில் நிறுத்திவைக்க... அப்ப செய்யாமல் விட்டுவிட்டு இப்போது வாய் கிழிய பேசுகின்றனர்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  உண்மையை ஒத்துக்கொண்டால் அவன் மாமனிதன்

  • தலைவா - chennai,இந்தியா

   சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மல்லையா அங்கிள் மாமாமனிதன்தான்.

 • A.Robet - chennai,இந்தியா

  யார் உண்மை பேசுகிறார்கள் என்பதை கண்டறிய உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தலாம்

  • தலைவா - chennai,இந்தியா

   எதிர்க்கட்சியாகவும் காங்., தோல்வி: பிரதமர் மோடி தலைவனின் டவுட்: ஆளுங்கட்சியான நீங்கள் அடைந்த தோல்விகளை பட்டியலிட்டால் நியாயஸ்தர் என்று தாராளமாக உங்களை அழைக்கலாம்.

  • Kailash - Chennai,இந்தியா

   இப்படியெல்லாம் பேசினால் நீங்கள் anti indian என்று சிலர் டென்ஷன் ஆவார்கள்

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   //இப்படியெல்லாம் பேசினால் நீங்கள் anti indian என்று சிலர் டென்ஷன் ஆவார்கள்..// அதற்கு ஒரு ஊளைநரிக்கூட்டமே இங்கே உலவிக்கொண்டுள்ளது.

 • Appan - London,யுனைடெட் கிங்டம்

  இந்த வாரம் கோவையில் ஊழல் குறித்து ஒரு விழிப்புணர்வு நடந்தது..அதில் சிறப்பு விருந்தாளியாக திருமதி..ரூபா ஐ.பி.எஸ் ,கருநாடக, முன்னாள் பரப்பன அக்கரஹரா ,ஜெயில் ஐ.ஜி, சசிகலா பேமஸ் கலந்து கொண்டு உரை ஆற்றினார். அவர் இந்தியர்களின் கலாச்சாரமே ஊழலை ஆதரிக்கிறது என்கிறார்..இந்த திருடன் மல்லையா சாமி ஐயப்பனுக்கு தங்கத்தால் படிக்கட்டு கட்டி கொடுத்த உள்ளான்..திருப்பதிக்கும் தங்கம் பரிசளித்து இருக்கிறான்..திப்பு சுல்தான் வாளை வாங்கி உள்ளான்..அப்போ கொடையாளி, என்று போற்றியவர் இப்போ என்னசொல்கிறார்கள்..அவனின் லண்டன் வீட்டில் தங்க கமோடர் உள்ளதாம்..இது சதாம் உசேன் அரண்மனையிலும் இருந்தது.. இவன் ராஜ்ய ஸபா எம்.பி ,எப்படி ஆனான்.. கர்நாடக எம்.எல் ஏ ஒவ்வொருவருக்கு தலா 5 கோடி கொடுத்து வாங்கினான்..அந்த எம்.எல் ஏ க்கள் இப்போ ஆளும் குமாரசாமி ஆட்கள்..அதாவது குமாரசாமியின் பணம் வாங்கி உள்ளார்..அப்போ குமாரசாமியும் மல்லையா ஊழலில் பங்கு உள்ளதல்லவா,,. இது போல் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இவன் பணம் கொடுத்து உள்ளான்..இவனை மட்டும் குற்றம் சொல்வது எந்த விதத்தில் நியாயம்..?காங்கிரஸ் என்ற கட்சி நிறைய உயிர்களை பலி கொடுத்து சுதந்திரம் வாங்கியது..இப்போ அதன் நிலை ஏன்னா../> அந்த நல்ல எண்ணத்தை வைத்து எல்லோரும் பணம் பண்ணிவிட்டார்கள்.. வங்கியின் வரா கடன் 10 லட்சம் கோடியை தாண்டும் என்கிறார்கள்..இது எப்படி நடந்தது..?. காங்கிரஸ் அரசு கிடைக்கும் கமிஷனுக்கு அள்ளி அள்ளி அரசு பணத்தை வீசினார்கள்.. சுதந்திரம் வாங்க உயிரை கொடுத்த காங்கிரஸ் ஏன் இப்படி ஆனது..?>கட்சியே குடும்பச்சொத்தாக மாறி, டைனஸ்டி ஆட்சி ஆகிவிட்டது.. அதனால் யார் கப்பம் காட்டுகிறார்களோ அவர்களுக்குபதவி என்றாகி விட்டது..தமிழகத்தில் ஜெயா செய்தத்தைடெல்லியில் சோனியா செய்து உள்ளார்.. இதை ஏன் யரும் தட்டிக்கேட்கவில்லை..?.பிஜேபி எதோ தூய கட்சி போலப் பேசுகிறது..பிஜேபி காங்கிரசை விட மோசமான கட்சி..இப்போ இந்தியாவின் பணத்தை கொள்ளை அடித்து வெளிநாட்டிற்கு ஓடியவர்கள் பெரும்பாலோர் பிஜேபியின் ஆட்கள்..வங்கியில் 10000 கோடி கொள்ளை அடித்து உள்ளார்கள்..இது எப்படி நடக்கும்..?> வாங்கி ஊழியர்கள் ஈடுபாடில்லாமல் இது நடக்குமா../>வங்கியின் சி.ஏ.ஓ வே அரசாங்கம் தான் நியமிக்கிறது .அந்தசி.ஏ .ஓ க்கள் பணம் கொடுத்தால் தான்பதவிகிடைக்கும்.. இப்படி பட்ட அமைப்பை வைத்து என்ன பண்ண முடியும்..?.இப்பவாவது இப்படி பணம் திருத்தம் இருக்க கண்காணிப்பு அமைப்புகளை அமைத்தது செயல் பாடணும் ..மோடி அரசாங்கம் காங்கிரசை பற்றி இவ்வளவு பேசுகிறது../. பிஜேபி ஏன் இன்னும் லோக்யத்து அமைக்கவில்லை ?...குஜராத்தில் மோடி அந்த அமைப்பை அமைக்காமல் ஆட்சி செய்தார்.இப்போ டெல்லியிலும் அப்படி செய்கிறார்..அப்போ பிஜேபியின் மோட்டிவ் என்ன..?. சமயம் பார்த்து பல லட்சம் கொடிகளை சுருட்ட..இது இந்தியர்களின் கலாச்சாரம்..என்ன பண்ண..?.

  • Darmavan - Chennai,இந்தியா

   வங்கியில் கொள்ளை அடித்து வெளி நாட்டுக்கு ஓடிய BJP ஆட்களை பட்டியலிடமுடியுமா?

  • தலைவா - chennai,இந்தியா

   சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பலவகையிலும் கொள்ளை அடிக்கிறார் ...யார்? அதான் நாட்டுக்கே தெரியுமே?

  • Karthik - Chennai,இந்தியா

   நீரவ் மோடி என்று உங்களுக்கு தெரியாது போல. அவர் கட்சிக்காரர் அல்ல ஆனாலும் அம்பானி மற்றும் அதானி போன்று நெருக்கமானார் என்று கேள்விப்பட்டேன். .

 • Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ

  நம்ம ஊர்ல கிரிமினல் சொல்ற பேச்சைத்தான் 100% நம்புவோம்... அவர்கள் (கிரிமினல்கள்க) கடுப்புல யாருக்காவது தொல்லை கொடுக்க நினைத்தால் ரொம்ப ஈஸியா செய்யலாம்..

  • தலைவா - chennai,இந்தியா

   இதென்னடா? புது கூத்தா இருக்கு ஜெட்லீ சொல்றத நம்புறதா? வேண்டாமா? மகேஷ்.

  • Karthik - Chennai,இந்தியா

   அப்படி தான் இருப்பது கடந்த கால வரலாறு.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  ஜெட்லீ செட்டியாரைக்கூட அடிக்கடி சந்திக்கத்தான் செய்கிறார்... அதற்காக செட்டியார் அளவுக்கு பிராட் என்று சொல்லி விட முடியாது.. CBI யின் மிக ரகசியமான ஆவணங்கள் கூட செட்டியாரின் வீட்டில் படுக்கை அறையில் எடுத்தார்கள்... அந்த அளவுக்கு ஜெட்லீ விளையாட மாட்டார் என்று நிச்சயமாக சொல்லலாம்... மல்லய்யா கதை விடுவது போல இருந்தால் ஏன் வங்கிகளிடம் பேசவில்லை? நிதி அமைச்சரிடம் பேசி என்ன பயன்? மல்லையாவின் செயல்பாடு லாஜிக் இல்லாததாக இருக்கிறது...

  • Anandan - chennai,இந்தியா

   உங்க பயத்தினால் உங்க கருத்து எவ்வளவு தரம் தாழ்ந்துவிட்டது. சிதம்பரத்தின் இனத்தை சொல்லி அவர்களின் இனத்தை கேவலப்படுத்தும் இது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறதா? கேவலம்.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

   செட்டியார் என்றால் வணிகர் என்று பொருள் கொள்க...

  • அப்பாவி - coimbatore,இந்தியா

   @காசி, "அதற்காக பசி அளவுக்கு பிராட் என்று சொல்லி விட முடியாது". ஆனாலும் பிராட் தான். ஓத்துக்கொண்டதற்கு நன்றி

  • sudarmani - chennai,இந்தியா

   காங்கிரஸ் செய்தால் ஊழல். இவர்கள் என்ன செய்தாலும் அதற்கு ஒரு சப்பைக்கட்டு. ஜெட்லி யோக்கியர் என்று எப்படி உங்களுக்கு தெரியும். விசாரணை நடத்துங்கள் என்று சொல்வதை விட்டு விட்டு யோக்கியன் என்று சொல்வது அபத்தம். ஏதோ பாஜகக்காரர்கள் யோக்கிய சிகாமணிகள் என்று நினைப்பு. நாடு கடக்க வழிவிட்டவர்கள் இன்று யோக்கியதை பேசுகிறார்கள். மல்லயா ஜெட்லீயிடம் தான் லண்டன் செல்வதாக கூறியிருக்கிறான் என்பதை இங்கு நினைவுகொள்ள வேண்டும். இந்த ப்ராடுக்கறார்கள் ஆட்சி இன்னும் ஏழு மாதம் தான்.

  • Kailash - Chennai,இந்தியா

   காசிமணிக்கு பயம் அதிகரித்தால் இப்படி தான் சம்பந்தமில்லாமல் உளறுவார்....

 • Karthik - Chennai,இந்தியா

  பேரம் நன்றாக நடந்து இருக்கும். நன்றாக இருந்தால் எல்லாம் அமைதியாக போய் இருக்கும். கட்டுப்படியாகததால் வெளி வந்துவிட்டது. அவரை வராண்டாவில் தான் சந்தித்தாரா அல்லது வேறு இடத்தில சந்தித்தாரா என்று மல்லையா தான் சொல்ல வேண்டும். ஆட்சி மாற்றம் வரும்போது எல்லாமும் தானாக வெளியே வரும். ஜெட்லி மீது ஏற்கவனே நிறைய புகார்கள் உண்டு சுப்ரமண்யஸ்வாமி இடத்தில இருந்து செய்தி வரும் இதனை உறுதி செய்யும். பார்க்கலாம்.

  • Darmavan - Chennai,இந்தியா

   திருடன் மல்லையா ஏற்கனவே இதை ஒப்புக்கொண்டுவிட்டான். வராண்டாவில் போகுற போக்கில் பேசினேன் என்று .

  • Karthik - Chennai,இந்தியா

   அது உங்களை திருப்திப்படுத்த. இன்னும் பேரம் நடந்து கொண்டு தான் இருக்கும். எனக்கு தெரியாது. இங்குள்ள உளவுத்துறை நண்பர்கள் உறுதிப்படுத்துவார்கள் .

 • Matha, Jathi Saarpattra Thesapakthan - Ariyalur,இந்தியா

  எந்த திருடன் உண்மைய ஒத்துக்கொண்டான். உள்ளே போட்டு லாடம் கட்டினால் தானாக எல்லா உண்மையும் வெளிவரும்.

 • uthappa - san jose,யூ.எஸ்.ஏ

  மால்யா குற்றவாளி, என்ன பொய் வேண்டுமானாலும் சொல்வான். அண்ணனுக்கு அப்படி சொல்ல சொல்லி ,மக்கள் பணத்தை வாரிகடனாக இறைத்த அரசியல் கட்சி செய்யக்கூடும்.

 • கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா

  அருண் ஜெட்லி ய விட விஜய் மல்லையா தான் சிவப்பா இருக்கார் அப்போ விஜய் மல்லையா சொல்றதுதான் உண்மையா இருக்கும்

  • Darmavan - Chennai,இந்தியா

   கிறுக்கன் கருத்து.

 • த.இராஜகுமார் - tenkasi,இந்தியா

  ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு மோடி தரேன்னு வாக்குறுதி சொன்னார் அப்போ அவர் சொன்னது பொய் இல்லையா

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   //ஒரு லிட்டர் பெட்ரோல் 50 ரூபாய்க்கு மோடி தரேன்னு வாக்குறுதி சொன்னார் அப்போ அவர் சொன்னது பொய் இல்லையா// அதுமட்டுமா? ..15 லட்சம் வங்கிக்கணக்கில் கொடுப்பேன் என்று சொன்னார்...செய்தாரா? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  திருடனை போலீசே அனுப்பி வைத்து விட்டு, தேடுவதெல்லாம் இந்தியாவில் சகஜம் தான்.

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  இட்டலியும் முல்லையாவும் சந்திக்கவே இல்லை... கேட்டுத்தொலையனும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement