Advertisement

உலக பணக்காரர்கள்: பிரான்சை முந்தும் இந்தியா

புதுடில்லி : 'வரும், 2022ல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் நாடுகளை விட, இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் அதிகமாக இருப்பர்' என, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.


'நைட் பிராங்க்' என்ற நிறுவனம், உலகளவில் பணக்காரர்கள் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது.


அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த, 2017ல், இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 200 ஆக இருந்தது; இது, 2022ம் ஆண்டில், 340 ஆக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த, 2017ல், பிரான்சில், 230, ரஷ்யா, பிரிட்டனில், தலா, 220 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு கூடுதலான சொத்து மதிப்புள்ள பணக்காரர்களாக திகழ்ந்தனர்.
இந்த எண்ணிக்கை, 2022ல், பிரான்சில், 310, ரஷ்யாவில், 270, பிரிட்டனில், 260 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


வலிமையான பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு உயர்வு ஆகியவை, உலக பணக்காரர்களின் எண்ணிக்கை உயர காரணமாக உள்ளன. இவற்றால், 2022ல், உலகம் முழுவதும், 9,570 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து உடையோராக இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த, 2017ல், 3,600 கோடி சொத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 6,900 ஆக இருந்தது. உலக நாடுகளில், அதிக பணக்காரர்கள் உள்ள நாடாக, அமெரிக்கா தொடரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2017ல், 3,600 கோடி சொத்து உள்ள பணக்காரர்கள், 1,830. இது, ஐந்தாண்டுகளில், 2,500 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • krishnan - Chennai,இந்தியா

  BJP யோட சொத்து மதிப்பு என்ன

 • Nathan - Bengaluru,இந்தியா

  இவர்கள் விளம்பரத்துக்காக வெளி நாட்டு நிறுவனங்களுக்கு வாரி இறைக்கும் பணத்தை உள் நாட்டு வளர்ச்சிக்கு செய்திருந்தால் நாட்டு மக்கள் செழிப்போடு இருந்திருப்பார்கள்.... இவர்கள் நாட்டை ஆளும் லட்சணம்தான் நாளும் அறிந்தது தானே... மேலும் மக்கள் பணத்தை பிடுங்கி பெரும் பணக்காரர்கள் கையில் கொடுத்தால் மிகப் பெரும் பணக்காரர்கள் ஆவதும் இயற்கை தானே....

 • Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா

  ஒரு நாட்டின் வளம் ஒரே இடத்தில் குமிவது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல... இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வுகள் பெருகிவிட்டதை காட்டுகிறது புள்ளிவிபரங்கள்... there is a need to increase incometax rates in india...

 • Anbarasan Kandasamy - muscat,ஓமன்

  இன்னும் கணக்கில் வராத கருப்பு பணம் வைத்துள்ள அரசியல்வாதிகள் வியாபாரிகள் நகை கடை காரர்கள் ரியல் எஸ்டேட் முதலைகள் ஆகிய கோடீஸ்வரர்களை சேர்த்தால் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கும்

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எப்பிடி ஊழலில் முதலிலோ அதே மாதிரி சொத்து பத்துகளிலும்

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  ஆம் இந்த விலைவாசி உயர்வு சம்பள உயர்வு மக்களின் வாங்கும் தன்மை எல்லாம் பார்க்கும் போது வெகு விரைவில் உலக பணக்கார நாடுகளில் ஒன்றாகி விடுவோம்.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  அதில் பாதி தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் ஆவார்கள்

 • s t rajan - chennai,இந்தியா

  ஆமா .... சோனியா, ராகுலு, வதேரா, சிதம்பரம், கார்த்தி, சிபலு, சங்க்வி, ஸ்டாலினு, கனி, ராஜா, அழகிரி, செல்லி, மாறன் (2), முலயாம்(3), அகிலேஷ் (2), மாயா, லல்லு (4), பவார், பாபு (5) .... இப்படி அரசியல் கொள்ளையர்களே தேறுமே....

  • MANI DELHI - Delhi,இந்தியா

   மல்லய்யாவையும் சேத்துக்குங்க. இதே ரகம் தான் அவனும். உங்கள் லிஸ்டில் உள்ள அனைவரும் மக்களை சுரண்டி தின்னவர்கள் தான். அதனால் தான் சொல்றேன்....

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   லிஸ்ட் ஒரு பக்கமாகவே செல்கிறதே.....சமீபத்திய அறிக்கையின்படி அமித்ஷாவின் மகன் மிக உயர்ந்த கோடீஸ்வரர்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளார். இந்த நான்கு வருடங்களில் எங்கிருந்து வந்தது இவ்வளவு கோடிகள்? இப்போது சிபிஐ நடத்தும் ரைடுகளில் இந்த ஆட்சியாளர்கள் அத்தனைபேரின் பெயர்களும் உள்ளதே எப்படி? நாட்டில் உள்ள அரசியல் வியாதிகள் மக்களின் ரத்தத்தை உறிஞ்சவந்த விஷக்கிருமிகள். விஷக்கிருமியில் நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை. எல்லாமும் அழித்து ஒழிக்கப்படவேண்டியவை.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

   இதற்கு ஆதாரம் ஏதேனும் கொடுக்கமுடியுமா?

  • MANI DELHI - Delhi,இந்தியா

   சபரி திருட்டு கூட்டம் என்பது ஒரு இனம். அதுக்கு பூகோள வரைமுறைகள் இல்லை. எல்லாருக்கும் தெரிஞ்சவங்க லிஸ்ட்டை போடணும் என்று தான் ராஜன் முயற்சி செய்தார். அதுல வேடிக்கை பாருங்க எல்லாரும் உங்களின் ஆதரவை பெற்றவர்களாக இருக்கும்போது உங்களுக்கு கோவம் வருவது இயல்பு தான். அதுக்காக அமித்ஷா மகன் கோடீஸ்வரனாகி விட்டான் என்றால் உடனே கோர்ட்டில் வழக்க போடுங்க அப்பத்தான் நீங்க சொல்றது ஈடுபடும் என்ன.... இந்த லிஸ்டின் பெரும்பாலான நபர்கள் வழக்குகளில் சிக்கி சிலர் ஜாமீனில் இருப்பதாக செய்தி இருக்கு என்பதயும் சேர்த்து பார்க்க வேண்டும்....

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ஒரு உதாரணம் சொல்லுகிறேன் கேளுங்க, இந்தியா எந்த அளவுக்கு பிச்சுக்கிட்டு போவுதுன்னு காட்டுறதுக்கு. உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் அமெரிக்காவுல இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்துட்டு போறவங்களா இருந்தா அவங்க கிட்ட கேட்டு பாருங்க. அமெரிக்காவுல இருந்து இந்தியா போயிட்டு வருகிறவன் கூட போயிட்டு வந்ததுக்கு அப்புறம் அப்புடியே சும்மா அலர்றான் பேயை கண்டா மாறி. டேய் மச்சான், அங்க இந்தியால சும்மா அள்ளி விடுறானுங்கடா பணத்தை, எங்க பாத்தாலும் காரு, எங்க பாத்தாலும் மால், அமெரிக்கால இருக்கிற எல்லா கம்பெனியும் அங்க இருக்கு, உலகத்துல கிடைக்கிற உணவு வகைகள் எல்லாம் பிச்சுக்கிட்டு போவுது, இந்தியால இல்லாத காரே கிடையாது, அதுவும் எங்க பாத்தாலும் ஆடி காரு, பென்ஸ் காருன்னு கலக்குறானுக. நாமதான் இங்க கிடந்து பிச்சை எடுக்கிறோம்ன்னு அழுவுறானுக. அமெரிக்காவை பார்த்து ஆ ன்னு வாயை பொளந்துட்டு பார்த்திட்டு இருந்த காலமெளலாம் போயி அவன் அவன் இந்தியாவை பார்த்து மூக்குல விரல் வெக்கிறானுக. அமெரிக்காவை விட காஸ்ட் ஆஃ லிவிங் இந்தியால தாஸ்தி, மக்கள் எல்லாம் எங்க இருந்து பணம் வருதுன்னே தெரியாத அளவுக்கு அடிச்சு விடுறாங்கன்னு சொல்லி ஆச்சரிய போடுறாங்க. ஸோ இந்தியால பொலம்புர அளவுக்கு கொஞ்ச மக்கள் இருந்தாலும் பெரும்பாலான மக்கள் சும்மா சந்தோசமா ஜாலியாதான் இருக்காங்க. நீங்க கண்ட கண்டவன் சொல்றதெல்லாம் கேட்டுட்டு டர் ஆவாதீங்க.

  • Welcome Back to 1900AD - korkai,இந்தியா

   yes overseas money are just invested in Real estate. common people with no knowledge 10 acre land will become millionaire a day and buy what you said Audi , BMW and the money goes back to West .In US People are investing in Startup like Amazon,Apple,Tesla and they become world leader in tech.

  • Muhundan - Kumbakonam,இந்தியா

   தொழிலில் உண்மையாக சம்பாதித்து உயர்ந்தவர்கள் வெகு சிலரே. அவர்களின் தொழிலில் பினாமியாக அரசியல்வாதியின் பணமும், வரி ஏய்ப்பு செய்தவர்களின் பணமும் அளவு கடந்து புழங்குகிறது. சமீபத்திய ரைடுகள் அதற்கு உதாரணம். வாகனங்கள் அதிகமானதற்கு காரணம் உலக வர்த்தகமயமாக்கல். உலக அளவில் புகழ்பெற்ற பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வந்ததன் காரணம், வங்கிகள் கடன் எல்லையை, முதலீட்டை விருப்படுத்தியன் விளைவு சாதாரண மாத சம்பளம் வாங்குபவர்களின் வீட்டில்கூட இன்று சொகுசு கார்கள் உள்ளன. அதுபோல் கைபேசி, வீட்டு உபயோக பொருட்கள் உபயோகம், அதன் சந்தை, உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் என இன்று வியக்கத்தக்க அளவில் விரிவடைந்துள்ளது. மொத்தத்தில் சொல்லவேண்டுமென்றால் தொழில்போட்டி, அதிக உற்பத்தி, லாபநோக்கம் இவற்றுடன் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்தது என்று எல்லாம் காரணிகளாக இந்தியா இன்று உலக அளவில் மிகப்பெரிய அளவில் சந்தையாக உள்ளது. ஆனால் வளர்ச்சியடைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உற்பத்தியில் தன்னிறைவு அல்லது அந்நிய நிறுவனங்களோடு போட்டியாகக்கூட இந்திய நிறுவனங்கள் இல்லாதது மிகப்பெரும் குறை.

 • கைப்புள்ள - nj,இந்தியா

  ம்ம்ம் பாத்துக்கோங்க, பா.ஜ.க பொலம்பிகளா. மோடி துவேஷிகளா பாத்துக்கோங்க. மக்களே நீங்களும் நல்லா பாத்துக்கோங்க. இன்பாக்ட் பெரும்பாலான மோடி துவேஷிகள் செம பணம் இருக்கிறானுகதான். ஒவ்வொருத்தனும் நல்லா சம்பளம் தனியா, கிம்பளம் தனியா, வீட்டு வாடகை தனியா, வீடு வாசல், வட்டி பணம், காலேஜுக்கு சீட்டு வாங்கி குடுத்த பணம்ன்னு நல்லா தின்னு கொழுக்கிறவனுக தான். என்ன ஒரே கருமம், இப்போ எல்லாம் பயங்கரமா கணக்கு கேக்கிறானுக. எங்க போனாலும் அதுக்கு என்ன கணக்கு, இதுக்கு என்ன கணக்கு, இது யாரோட பணம், அது யாரோட பணம், நீ யாராச்சும் பினாமியா, இல்ல தி.மு.க க்கு வேலை செய்யிற திருட்டு வாத்தியா, இல்ல வெளிநாட்டு பணம் வாங்குற திருடனா, இல்ல குருவியா ன்னு ஏகப்பட்ட கேள்வி கேட்டு நொண்டி நொங்கெடுக்கிறானுக. அதுனாலதான் இவனுக இவ்வளவு எரிச்சலு. சும்மா எவன் வேணா எப்புடி வேணா சம்பாரிச்சுக்கோன்னு விட்டு பாருங்க, அப்புறம் போட்டு புகழ்-ஓ புகழ் ன்னு புகழ்ந்து தள்ளுவானுக. எல்லாம் சில்லறை பசங்க திரட்டு பசங்க. இவனுக சொல்றதெல்லாம் நம்பாதீங்க.

  • Pasupathi Subbian - trichi,இந்தியா

   துண்டு போட்டு, கமிஷன் வாங்கி சேத்து வச்ச பணத்தை எல்லாமே ஒரே ராத்திரியில் செல்லாது என்று ஆகி, வயிற்றை கலக்கி, இன்னமும் எந்திரிக்கவே இல்லை. இந்த லட்சணத்தில் எந்த வேலை செய்ஞ்சாலும் GST வேணும் , அப்படி ஜி எஸ் டி வாங்கினால் அப்புறம் கணக்கு காண்பிக்கணும். இப்படி மடக்கிப்போட்டு கிடுக்கிப்பிடி செய்தால் எங்கே பிழைக்க முடியும். வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்புனால் , வான் விபரத்தை இந்தியாவுக்கு அனுப்பி விடுகிறான், பிழைக்க வழியின்றி தவிக்கிறோம். மோடி ஒழிக்க, பி ஜெ பி ஒழிக

 • chails ahamad - doha,கத்தார்

  நைட் பிராங்க் என்ற நிறுவனம் உலகளவில் பணக்காரர்கள் பற்றி ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுதை கவனத்தில் கொண்டால் , 2017 ல் இந்தியாவில் 3600 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு வைத்துள்ளவர்கள் 200 பேர்கள் என்று இருப்பது வரும் 2022 ல் 340 பேர்கள் என அதிகரிக்கும் என கணித்துள்ளார்கள் என்பதாக பத்திரிகையின் செய்தியாகும் , மற்ற நாடுகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை , அந்த நாடுகளில் ஊழல் செய்பவர்கள் எவராக இருப்பினும் ஏன் அந்த நாடுகளின் அதிபராக இருந்தாலும் குற்றங்கள் உறுதி செய்யப்பட்டால் தன்டனைகள் அனுபவிக்க வேண்டும் என்பதை தவிர்க்க இயலாது என்ற நிலைகளை நாம் கண்டும் , அறிந்தும் உள்ளோம் என்பதே உண்மையாகும் , இந்தியாவில் ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதே தலையெழுத்து என்றாலும் , வசதி படைத்தவர்களிலும் ஆளும் கட்சியின் பினாமிகளாக இருப்பவர்கள் பெயரளவில் செயல்படாத நிறுவனங்களின் தலைவராக பதிவு செய்து கொண்டு , வருமானங்களே இல்லாத நிறுவனம் ஒரே வருடத்தில் 100 மடங்கு லாபங்கள் சம்பாதித்ததாக கணக்கு காட்டி உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிக்க துடிப்பது இன்றைய மத்திய ஆட்சியாளர்களாகிய பா ஜ வின் ஆட்சியிலே சர்வ சாதாரணம் என்பதை திரு . அமித்ஷா அவர்களது மகனை போல் எத்தனை பேர்கள் என்பது ஆளுபவர்களுக்கே வெளிச்சமாகும் . இந்தியாவில் நம்மை ஆளும் வர்க்கத்தின் தேர்தல் கால முதலீடுதாரர்களில் ஒருவராகிய கார்ப்பரேட் நிறுவனத்தின் வருமானமும் பன் மடங்கு கூடியுள்ளதாக சில புள்ளி விபரங்கள் நமக்கு உணர்த்துகின்றதையும் கவனத்தில் கொண்டால் , ஏழைகள் என்றும் ஏழைகளாக இருப்பதிலும் அவர்களை கசக்கி பிழிந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டிட வழி வகுப்பதில் இன்றைய பா ஜ ஆட்சியாளர்களுக்கு நிகர் அவர்களே நிகர் என்பதையும் நாம் காண்கின்றோம் , மொத்தத்தில் ஒன்றை நாம் நினைவில் கொள்ள மறக்கலாகாது , வரும் 2019 பாராளுமன்ற தேர்தலுக்குள் இந்திய மக்களனைவரும் பணக்காரர்கள் ஆகி விட்டதாக அறிக்கைகள் வெளியிடவும் தயங்க மாட்டார்கள் பொய்யர்களாகிய இன்றைய பா ஜ ஆட்சியாளர்கள் என்பதும் உறுதியாகும் . ஏழைகளும் வாழ்வதற்கு வரி கட்டுவது அவசியம் எனவும் சட்டமியற்றவும் செய்வார்களோ என அச்சத்தில் நம்முடைய வாழ்க்கையை கழிக்க வேண்டியுள்ளதும் உண்மையாகும் .

  • ARUNACHALAM, Chennai - ,

   நீங்கள் அங்கே எப்படி? இங்கே அனுப்பி வைக்கப்படும் பணம் வரிவிலக்கு பெற்றது தானே? வரி விலக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement