Advertisement

முன்னாள் தளபதிக்கு ஊழல் வழக்கில் ஜாமின்

புதுடில்லி: இத்தாலி நிறுவனத்திடம் இருந்து, வி.வி.ஐ.பி.,களுக்கான விமானம் வாங்கியதில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், விமானப்படை முன்னாள் தளபதி, எஸ்.பி.தியாகிக்கு, சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமின் வழங்கியது. ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த, 'அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' என்ற நிறுவனத்திடம் இருந்து, வி.வி.ஐ.பி.,க்களுக்கான விமானம் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதில், 2,000 கோடி ரூபாய்க்கு மேல், பணப் பரிமாற்ற மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, விமானப் படை முன்னாள் தளபதி,
எஸ்.பி.தியாகி, அவரது உறவினர்கள் மற்றும், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவன இயக்குனர்களுக்கு, அமலாக்க துறை, 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதையடுத்து, எஸ்.பி.தியாகி மற்றும் அவரது உறவினர்கள், டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜராகினர்.
அப்போது, இந்த வழக்கில் கைதாவதை தவிர்க்க, ஜாமின் அளிக்கும்படி, தியாகி மற்றும் அவரது உறவினர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், தியாகி உட்பட, அவரது உறவினர்களுக்கு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். இத்தாலி நிறுவன இயக்குனர்கள், நேற்று
விசாணைக்கு ஆஜராகவில்லை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement